முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக.வில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தனது வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக இன்று பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் சென்ற பன்னீர்செல்வம் அங்து தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஒருவார காலம் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
