டிரம்ப்-முனீர் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் AIஉதவியுடன் அறிக்கை வெளியிட்டது நெட்டிசன்களின் மீம்ஸ்க்கு வழிவகுத்தது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்ப்போம்.

Netizens Meme About Donald Trump-Asim Munir Meeting: வெள்ளை மாளிகையில் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்பு சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அதாவது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்து பீல்ட் மார்ஷலாக மாறிய அசிம் முனீர்க்கு வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட மதிய விருந்து அளித்தார்.

டொனால்ட் டிரம்ப் அசிம் முனீர் சந்திப்பு

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்தது. அமெரிக்காவும், ஈரானும் பாம்பும், கீரியுமாக உள்ள நிலையில், பாகிஸ்தான் ஈரானுடன் நெருங்கிய உறவில் இருக்கும் வேளையில் அசிம் முனீரின் வருகை கவனத்தை ஈர்த்தது. "அவர்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஈரானை மற்றவர்களை விட நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த ஒரு மணி நேர சந்திப்பின் போது முனீர் உடன் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் இருந்தார்.

AI உதவியுடன் அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்

டொனால்ட் டிரம்ப்-அசிம் முனீர் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதாவது பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கை சொந்தமாக இல்லாமல் AI-இன் செய்திக்குறிப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஒரு அறிக்கையை கூட சொந்தமாக எழுத முடியாதக் பாகிஸதானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மீம்ஸ்களை அள்ளித் தெளிக்கும் நெட்டிசன்கள்

மேலும் இந்தியாவுக்கு எதிரான மோதலின்போது பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து தாங்கள் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் கொண்டாடியது. அசிம் முனீர் ராணுவத் தளபதியாக இருந்து பீல்ட் மார்ஷலாக தனக்குத் தானே பதவி உயர்வு அளித்துக் கொண்டார். மேலும் பாகிஸ்தான் கெஞ்சியதால் இந்தியா போரை நிறுத்தியதால் தான் தலையிட்டதால் தான் போர் நின்றது என டொனால்ட் டிரம்ப் மார்தட்டிக் கொண்டார்.இதனால் இவர்கள் இருவரையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை அள்ளித் தெளித்து விட்டுள்ளனர்.

நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

பாகிஸ்தானின் ஏஐ அறிக்கையை சுட்டிக்காட்டிய ஒரு நெட்டிசன் "ஒரு போரில் தோற்று, மற்றொரு நாட்டின் இராணுவப் பயிற்சியை சொந்த இராணுவ நடவடிக்கையாகக் காட்டும்போது பதவி உயர்வு கிடைக்கும் ஒரு படிப்பறிவில்லாத நாட்டிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இது பாகிஸ்தானில் மட்டும் தான் நடக்கும்

''உங்கள் நாட்டின் சார்பாக உலகம் முழுவதும் பார்க்க ஒரு அறிக்கை வெளியிடப்படுவதற்கு AI ஐப் பயன்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். இது பாகிஸ்தானில் மட்டும் தான் நடக்கும்'' என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

உருது பஞ்சாபி புரியாது

''இது மிகப்பெரிய சங்கடம்!!!! ஆனால் தப்புவுக்கு உருது பஞ்சாபி புரியாது என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று வேறு ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். 

Scroll to load tweet…

பாகிஸ்தான் ஏஐ அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

பாகிஸ்தான் ஏஐ பயன்படுத்தி வெளியிட்ட அறிக்கையில், ''வெள்ளை மாளிகையின் அமைச்சரவை அறையில் ஒரு மணி நேர மதிய உணவுக் கூட்டமாக திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது, இது டிரம்புக்கும் முனிருக்கும் இடையிலான 'உரையாடலின் ஆழத்தையும் நல்லிணக்கத்தையும்' குறிக்கிறது. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் அமர்ந்திருந்த டிரம்ப், "பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்" என்று கூறப்பட்டுள்ளது.