AK 64 : அஜித்தின் ஏகே 64 படத்தில் இணையும் சூப்பர்ஸ்டார் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 64 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

AK 64 Movie Update
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் தான் நடிகர் அஜித்தின் கெரியரில் முதன்முறையாக 200 கோடி வசூல் செய்த படமாகும். அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். அதில் அஜித்துடன் திரிஷா, சுனில், பிரசன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின்னர் சில மாதங்கள் நடிப்புக்கு ரெஸ்ட் விட்டுள்ள நடிகர் அஜித், தற்போது கார் ரேஸில் செம பிசியாக உள்ளார்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்கள்
நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கப்பட உள்ளது. நடிகர் அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றும் போது அவர்களின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டால் அவர்களுடனே தொடர்ந்து பணியாற்றுவார். உதாரணத்திற்கு சிறுத்தை சிவா உடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் பணியாற்றினார். அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது எச்.வினோத்தின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துப் போனதால் அவருடன் அடுத்தடுத்து வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களில் பணியாற்றி இருந்தார் அஜித்.
மீண்டும் ஆதிக் இயக்கத்தில் அஜித்
அந்த வகையில் அவர் கடைசியாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்தை செம மாஸாக காட்டி இருந்தார் ஆதிக். அது அஜித் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார் அஜித்குமார். அந்த வகையில் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 64 திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளாராம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க உள்ளனர்.
அஜித் சம்பளம் எவ்வளவு?
அஜித் - ஆதிக் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தை சுமார் 260 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ளார்களாம். இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ.180 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதற்கு முன்னர் அவர் குட் பேட் அக்லி படத்திற்காக ரூ.163 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். தற்போது ஏகே 64 படத்திற்கு அதைவிட கூடுதலாக 17 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஏகே 64 திரைப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ரூ.12 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.
அஜித் படத்தில் மோகன்லால்
இந்நிலையில் ஏகே 64 திரைப்படம் பற்றிய மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இதுமட்டும் உறுதியானால் அஜித்தும் மோகன்லாலும் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் படமாக ஏகே 64 அமையும். அண்மையில் எம்புரான், துடரும் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள மோகன்லால், அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இதுதவிர சிவகார்த்திகேயனின் எஸ்.கே.24 படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது ஏகே 64 படமும் இணைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

