- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
Karthigai Deepam Serial Today 1132 Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1132ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

Karthigai Deepam serial today 1132 Episode highlights
கார்த்திகை தீபம் சீரியலில் தனது அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக ரோகிணி தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க கூட துணிந்தார். அப்படி அவர் கருவை கலைத்தாரா? சாமுண்டீஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரிந்ததா? என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம். கார்த்திகை தீபம் சீரியலில் 1132ஆவது எபிசோடில் கார்த்திக் தனது மாமியார் சாமுண்டீஸ்வரிக்கு எல்லா உண்மையும் தெரிய வேண்டும் என்பதற்காக ஜோதிடர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
What is the truth revealed by the astrologer in Karthigai Deepam
அப்போது ரோகிணியின் ஜாதகத்தை வேறொருவரிடம் கொடுத்து பிறக்கும் பேர குழந்தையின் நேரம் எப்படி இருக்கிறது, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா என்றெல்லாம் கேட்க சொன்னார். அதே போன்று அவரிம் ஜோதிடரிம் சென்று கேட்டார். அப்போது, அந்த ஜோதிடரோ இந்த குழந்தை பிறக்கும் நேரம் ராஜயோகம். குழந்தையின் அம்மாவிற்கு நல்ல காலம் ஆரம்பமாகிறது. அதோடு குழந்தையின் பாட்டிக்கு ஆயுள் கெட்டி. அவர்கள் 100 வயது வரை நன்றாக வாழ்வார்கள் என்றார்.
Did Rohini really have an abortion in Karthigai Deepam?
இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த சாமுண்டீஸ்வரி, உள்ளே சென்று அந்த ஜோதிடரிம் ஏன் இப்படியொரு பொய் சொன்னீர்கள் என்று கேட்க, அதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை கடத்தி சென்று சிவனாண்டி அப்படி சொல்ல சொன்னதாக உண்மையை வெளிப்படுத்தினார். இதைக் கேட்டு அதிர்ச்சி சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.
Karthigai Deepam Serial Today Episode Tamil 2026
சந்திரகலாவிற்கு ஒரு பக்கம் ஷாக்கிற்கு மேல் ஷாக். ஏனென்றால், கார்த்திக் எல்லா உண்மையையும் கண்டுபிடித்துவிட்டார். மயில்வாகனம், ராஜராஜன் என்று அனைவரும் ஹேப்பி. ரோகிணிக்கு பிறக்கும் குழந்தையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டது. இனி, ரோகிணியும் இதை கேட்டால் ரொம்பவே சந்தோஷப்படுவார். இதற்காக ரோகிணியை அனைவரும் தேடினர். அப்போது மயில்வாகனம் தான் கொடுத்த புகைப்படத்தை எடுத்து பார்த்தார். அதில் ஐ லவ் யூ என்பதற்கு பதிலாக ஐ மிஸ் யூ என்று எழுதியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
Karthigai Deepam Rohini Abortion Truth
இதைத் தொடர்ந்து கார்த்திக், மயில்வாகனம், ராஜராஜன், ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரி என்று எல்லோருமே ரோகிணியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல் சந்திரகலா தனது கணவர் சிவனாண்டிக்கு போன் போட்டு அக்காவிற்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. இந்த டிரைவர் தான் எல்லா உண்மையும் கண்டுபிடித்துவிட்டான் என்றார்.
Zee Tamil Karthigai Deepam Serial Twist 2026
ஆனால், ஒரு சந்தோஷம், தனது அம்மாவிற்காக ரோகிணி கருவை கலைக்க ஹாஸ்பிடலுக்கு சென்றிருக்கிறார். அப்படி அவர் கருவை கலைத்துவிட்டால் நாம் நினைத்தது நிறைவேறிவிடும் என்ற சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். ஆனால், இயக்குநர் அப்படியொரு டுவிஸ்ட் கொடுக்கவில்லை. கடைசியாக ரோகிணி சென்ற மருத்துவமனையை கண்டுபிடித்த ரேவதி மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் நேராக ஆபரேஷன் தியேட்டருக்கு சென்று ரோகிணிக்கு அபார்ஷன் செய்வதிலிருந்து அவரை காப்பாற்றினர்.
Karthigai Deepam Today Full Episode 1132
ரோகிணியோ மயக்கத்திலிருந்த நிலையில் மருத்துவரிடம் எல்லா உண்மையும் சொல்லி அவரை ஆபரேஷன் செய்யவிடாமல் தடுத்தனர். இன்னும் சற்று நேரம் தாமதமாக வந்திருந்தால் இந்த நேரம் ஆபரேஷன் செய்திருப்போம் என்று மருத்துவர் சொல்ல, நல்லவேலையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டனர். ஆனால் சந்திரகலாவோ, ரோகிணி வயிற்றில் வளரும் கருவை கலைக்க இனி அவராக முயற்சி எடுப்பார் என்று தெரிகிறது.
Karthigai Deepam Rohini and Chandrakala plan update
எப்படியாவது குடும்பத்தில் உள்ளவர்களின் நிம்மதியை கெடுக்கவேண்டும் அல்லவா. அதற்காக இனி அவர் முயற்சி செய்வார். இது ஒரு புறம் இருக்கும் நிலையில் மயில்வாகனம் சொந்தமாக ஹோட்டல் பிஸினஸிற்கான எல்லா வேலைகளையும் செய்த நிலையில் இனி வரும் நாட்களில் ஹோட்டல் திறப்பு விழா நடத்தப்படும் என்று தெரிகிறது. எப்படியோ கார்த்திக் தான் சொன்ன மாதிரி ரோகிணி கர்ப்பமாக இருப்பது பற்றி தனது மாமியாரிடம் சொல்லி, எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து வைத்துவிட்டார்.