இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம், முழு அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
India vs England Test Series: Where to Watch and Live Streaming: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 20ம் தேதி) லீட்ஸில் தொடங்குகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட படை இங்கிலாந்தை சாய்க்க முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது.
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் பிட்ச் எப்படி?
இங்கிலாந்து அணி முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் நாளை டாஸ் போடுவதற்கு முன்பு அறிவிக்கப்படும். முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் லீட்ஸின் ஹெடிங்லின் பிட்ட்சை பொறுத்தவரை முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் போகப் போக இரண்டாவது நாளில் இருந்து பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். ஆகவே பேட்ஸ்மேன்கள் களத்தில் சிறிது நேரம் பொறுமை காத்தால் ரன்கள் சேர்க்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 51 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இங்கிலாந்து 35 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட்போட்டிகளில் இந்தியாவைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் அதிகப்பட்ச ரன் (2535 ரன்) அடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்டுகள் (114)
வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஜோ ரூட் அதிக ரன்கள் (2846) அடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட்டுகள் (149) வீழ்த்தியுள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி வர்ணையுடன் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளின் வர்ணனையுடன் பார்க்கலாம்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். 2.30 மணியளவில் டாஸ் போடப்படும்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழு அட்டவணை:
முதல் டெஸ்ட்: ஜூன் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2025. போட்டி நடைபெறும் இடம்: ஹெடிங்லி மைதனாம் லீட்ஸ்.
இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை. போட்டி நடைபெறும் இடம்: எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்.
மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை. போட்டி நடைபெறும் இடம்: லார்ட்ஸ், லண்டன்.
நான்காவது டெஸ்ட்: ஜூலை 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை. போட்டி நடைபெறும் இடம்: ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்.
ஐந்தாவது டெஸ்ட்: ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை. போட்டி நடைபெறும் இடம்: கென்னிங்டன் ஓவல், லண்டன்.
இந்தியா vs இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
