பாதுகாப்பில் டாடாவ அடிச்சுக்க ஆயே இல்ல! வெறும் ரூ.68000 டவுண் பேமெண்டில் Tata Punch
இந்தியாவில் தற்போது சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதான ஏக்கமாக உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் கார் நிறுவனங்களும், வங்கிகளும் EMIயில் கார்களை அடிமட்ட விலைக்கு வழங்குகின்றன.

Tata Punch in EMI
டாடா பஞ்ச் 2024 ஆம் ஆண்டில் இந்திய SUV சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது, அதன் பாதுகாப்பு மற்றும் மலிவு விலைக்காக பாராட்டப்பட்டது. 5 நட்சத்திர குளோபல் NCAP மதிப்பீடு மற்றும் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.32 லட்சம் வரை கவர்ச்சிகரமான விலை ஆகியவை அதன் வெற்றியை பிரகாசமாக்கியது.
டாடா பஞ்ச் கார்
டாடா பஞ்ச் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி ஆகும். அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விலை அதன் பிரபலத்திற்கு பங்களித்தன. 5 நட்சத்திர குளோபல் NCAP விபத்து சோதனை மதிப்பீடு இந்திய நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தது.
Tata Punch Price
Tata Punch விலை விவரங்கள்
டாடா பஞ்சின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ₹6 லட்சம், டாப் வேரியண்டின் விலை ₹10.32 லட்சம். இது 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
How to Buy Tata Punch Through Loan
Tata Punchஐ லோன்ல் வாங்குவது எப்படி?
பஞ்ச் ப்யூர் MT ஆன்-ரோடு விலை ரூ.6,88,250. லோன்ல வாங்க ரூ.6.2 லட்சம் வரைக்கும் லோன் கிடைக்கும். டவுன் பேமெண்ட் ரூ.68,000.
Tata Punch EMI
Tata Punch EMI எவ்வளவு?
9% வட்டிக்கு 7 வருஷ லோன்ல வாங்கினா, மாசம் ரூ.10,000 EMI. 6 வருஷத்துக்கு ரூ.11,200, 5 வருஷத்துக்கு ரூ.12,900, 4 வருஷத்துக்கு ரூ.16,000 EMI கட்டணும்.
அம்சங்கள் என்னென்ன?
7 இன்ச் டிஸ்ப்ளே, ஆட்டோ AC, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லைட், மழை சென்சார் வைப்பர், கனெக்டட் கார் டெக்னாலஜி, புஷ் பட்டன் ஸ்டார்ட்னு நிறைய அம்சங்கள் இருக்கு.
Tata Punch Safety Details
Tata Punch பாதுகாப்பு அம்சங்கள்
2 ஏர் பேக்ஸ், ABS, EBD, ESC, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா இருக்கு. மைலேஜ் லிட்டருக்கு 18 கி.மீ. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்.