இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:49 PM (IST) Jul 17
உங்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு முறைமையைப் புரிந்துகொள்ளுங்கள். தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான சரியான அணுகுமுறையைத் தேர்வு செய்ய, தரமான, அளவு சார்ந்த மற்றும் கலப்பு முறைகளை இங்கே காணலாம்.
10:35 PM (IST) Jul 17
யூடியூபில் அதிக லைக்ஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்களைப் பெற வேண்டுமா? கிளிக்பைட், திருடப்பட்ட உள்ளடக்கம், நிலையற்ற பதிவேற்றங்களைத் தவிர்க்கவும். உண்மையான வளர்ச்சிக்கு இந்தியக் கிரியேட்டர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியத் தவறுகள் இங்கே.
10:31 PM (IST) Jul 17
ஆன்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு: இனி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டார். 'ரஸ்ஸல்-மசல்' ஓய்வு பெறுகிறார். அவரது பங்களிப்பு என்ன?
10:22 PM (IST) Jul 17
ஐபோன் 17, ஏர், புரோ, புரோ மேக்ஸ் மாடல்கள் குறித்த பரபரப்பான வதந்திகள் பரவி வருகின்றன. விரைவில் சந்தைக்கு வரவுள்ள ஐபோன் 17 சீரிஸின் விலைகள், அம்சங்கள், கேமரா, டிசைன் போன்ற லீக் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
10:22 PM (IST) Jul 17
பள்ளி முதல் முதுகலை வரை இலவச ஆன்லைன் கல்விக்கு அரசு வழங்கும் 5 தளங்கள்! NPTEL, SWAYAM, DIKSHA, e-PG Pathshala, Virtual Labs - மூலம் தரமான கல்விப் பொருட்களைப் பெறுங்கள்.
10:11 PM (IST) Jul 17
இந்தியாவின் தலைசிறந்த MBA கல்லூரிகளில் சேர விரும்புகிறீர்களா? CAT, XAT, MAT, SNAP போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற உதவும் 7-படி வழிகாட்டியைப் படியுங்கள். படிப்புத் திட்டம், ஆதாரங்கள், மாதிரித் தேர்வுகள் மற்றும் விண்ணப்ப செயல்முறை.
10:04 PM (IST) Jul 17
தான்சானிய விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், கணிக்க முடியாத வானிலை சவால்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் Rada360 போன்ற AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிக.
09:59 PM (IST) Jul 17
சம்பளச் சீட்டு இல்லாமல் இந்தியாவில் தனிநபர் கடன் பெறுவது எப்படி, மாற்று ஆவணங்கள் என்ன, கடன் வழங்கும்போது வங்கிகள் என்ன பார்க்கின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
09:57 PM (IST) Jul 17
திருநெல்வேலி மாவட்ட வருவாய் துறையில் 37 கிராம உதவியாளர் பணியிடங்கள்! 10ஆம் வகுப்பு தகுதி, மாதம் ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 16, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
09:50 PM (IST) Jul 17
மன ஆரோக்கியம், உற்பத்தித்திறன் மற்றும் வேலை திருப்தியைப் பாதுகாக்க ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய 7 அத்தியாவசிய எல்லைகளை அறிக. வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த வழிகாட்டி!
09:25 PM (IST) Jul 17
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
09:00 PM (IST) Jul 17
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விடுதலைச்சிறுத்தைகள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
08:57 PM (IST) Jul 17
ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ஜூலை -- 2025 அன்று வெளியாகிறது. முடிவுகளை சரிபார்ப்பது, ஸ்கோர்கார்டைப் பதிவிறக்குவது மற்றும் JRF, உதவிப் பேராசிரியர், PhD சேர்க்கைக்கான கட்ஆஃப் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
08:17 PM (IST) Jul 17
காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு.
08:04 PM (IST) Jul 17
07:24 PM (IST) Jul 17
சிபிஎஸ்இ பள்ளிகள், மாணவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்க, கொழுப்பு நிறைந்த உணவுகளின் தீமைகளை விளக்கும் 'ஆயில் போர்டு'களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
06:54 PM (IST) Jul 17
வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கம். ஆனால் அதற்கு சரியான வழி தெரியாமல் தான் அதிகமானவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற 3 ரகசியங்களை சாணக்கிய நீதி சொல்கிறது.
06:33 PM (IST) Jul 17
மாரடைப்பு, இதய அடைப்பு, இதயம் செயலிழப்பு இந்த மூன்று வார்த்தைகளுமே நாம் அடிக்கடி கேட்கக் கூடிய ஒன்று தான். ஆனால் இந்த மூன்றும் ஒன்று என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிற்கு என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொண்டால் இந்த குழப்பம் தீரும்.
06:32 PM (IST) Jul 17
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
06:02 PM (IST) Jul 17
காபியில் உள்ள முக்கிய மூலப் பொருளான காஃபினை தினமும் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை தரும். ஆனால் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு அளவிலான காஃபின் எடுத்துக் கொள்ள வேண்டால் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பது அவசியம்.
05:49 PM (IST) Jul 17
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
05:46 PM (IST) Jul 17
TVS iQube எலக்ட்ரிக்: மின்சார ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை, TVS நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் தேர்வாக வேகமாக மாறி வருகிறது. நிறுவனத்தின் வரவிருக்கும் TVS iQube 100 கிலோமீட்டர் வரை சிறந்த ரேஞ்சை வழங்குகிறது. நீங்கள் அதை EMI-யிலும் வாங்கலாம்.
05:35 PM (IST) Jul 17
உடல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? இந்த 6 அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக எலுமிச்சை தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விடுங்கள். இல்லை என்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
05:30 PM (IST) Jul 17
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் வெள்ளி நகைகள் அணியக்கூடாது என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:27 PM (IST) Jul 17
04:58 PM (IST) Jul 17
நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வீடியோ மூலமாக அழைப்பு விடுத்ததால் அதனை நம்பி அளவுக்கு அதிகமான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குவிந்ததாகவும், இதன் விளைவாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கர்நாடகா அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
04:54 PM (IST) Jul 17
இந்தியா டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய்ஸ் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. PTC இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரம்மோஸ் ஏவுகணைக்குத் தேவையான டைட்டானியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் இந்தியா உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
04:45 PM (IST) Jul 17
நம் உடலின் ஐந்து பாகங்களை அடிக்கடி கைகளால் தொடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த பாகங்கள் என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:28 PM (IST) Jul 17
இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் சந்திக்கும் இளநரை பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் சூப்பரான மருந்து இருக்கு. மிக அற்புதமான 5 மூலிகைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் இளநரைக்கு குட்பை சொல்லி விட்டு, இளமையை பாதுகாக்க முடியும். செலவும் குறைவு தான்.
04:02 PM (IST) Jul 17
அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 1958 லிதுயா விரிகுடா மெகா சுனாமியை நினைவூட்டுகிறது. அலாஸ்காவின் புவியியல் அமைப்பு மெகா சுனாமி மீண்டும் நிகழக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன.
04:02 PM (IST) Jul 17
இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68.
03:54 PM (IST) Jul 17
காமராஜர், கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்ததாகக் கூறப்படுவது பச்சைப் பொய் என்றும், திமுக வரலாற்றைத் திரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
03:36 PM (IST) Jul 17
தமிழகம் ஆன்மீக பூமிக்கு பெயர் பெற்ற ஒரு நிலப்பரப்பாகும். இங்கு பல அதிசயமான கோயில்கள் உள்ளன. அந்த வகையில் தீராத தோல் நோய்களை தீர்க்கும் ஒரு அற்புதமான கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:21 PM (IST) Jul 17
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
03:02 PM (IST) Jul 17
ஸ்டாலின் வீட்டிற்குப் போக உள்ளார், எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு வர உள்ளார் என்று வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.
02:58 PM (IST) Jul 17
அமித்ஷா கூறியது போல கூட்டணி ஆட்சி தொடர்பான முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
02:56 PM (IST) Jul 17
தங்கம் மற்றும் வெள்ளி மதிப்பீட்டில் லண்டன் புலியன் மார்க்கெட் விலைகளுக்கு பதிலாக உள்நாட்டு விலைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட செபி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரே விலை நிர்ணய முறை உருவாகும்
02:42 PM (IST) Jul 17
சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை அதன் டிஆர்பி நிலவரத்தை வைத்து தான் கணிப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
02:38 PM (IST) Jul 17
02:14 PM (IST) Jul 17
ஆடி மாதத்தில் புது மண தம்பதிகளுக்கு கொடுக்கப்படும் ஆடி பால் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.