- Home
- Tamil Nadu News
- அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி தான்.! இதை நான் மறுத்தால் தொண்டனாகவே இருக்கவே தகுதி இல்லை- அண்ணாமலை
அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி தான்.! இதை நான் மறுத்தால் தொண்டனாகவே இருக்கவே தகுதி இல்லை- அண்ணாமலை
அமித்ஷா கூறியது போல கூட்டணி ஆட்சி தொடர்பான முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு கேட்கும் கூட்டணி கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுக்கு தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி குரல் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் தவெக தலைவர் கூட்டணி ஆட்சி அமைப்போம் என தெரிவித்ததையடுத்து மற்ற அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணியான திமுக மற்றும் அதிமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேட்க தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில் திமுகவை வீழ்த்த மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, தற்போது கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கையால் அதிரிந்துள்ளது. அதிமுக தலைமை கூட்டணி ஆட்சியை மறுத்தாலும் பாஜக தலைமை உறுதியாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,
அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி
அதிமுக பாஜக கூட்டணி உருவானதில் எனக்கு எந்தவித பங்கும் இல்லை. இந்த கூட்டணியில் என்ன பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்பதிலும் எனது பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என பேசினார்கள் என்பதிலும் எனது பங்கு இல்லை.
இந்த நிலையில் எனது தலைவர் அமித்ஷா சொல்வதை தான் நான் கேட்க முடியும். அமித்ஷா ஒரு முறை அல்ல பல முறை பேட்டியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தொண்டனாக எனது கருத்தை மாற்றிக் கொண்டு கூட்டணி ஆட்சி இல்லை என நான் சொன்னால் இந்த பாஜகவில் தொண்டனாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை.
தொண்டனாக இருக்கவே தகுதி இல்லை
எனது தலைவர் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாமல், எனது தலைவரின் கருத்தை வலுப்படுத்த முடியாமல், எனது தலைவர்கள் சொன்ன கருத்திலேயே நான் சந்தேகத்தை எழுப்பினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கக் கூடாது தலைவனாக இருக்கக் கூடாது.
கூட்டணி தொடர்பாக தலைவர்கள் பேசி உள்ளார்கள். இதில் எனது பங்கு எதுவும் இல்லை. எனவே எனது தலைவர்கள் பேசியதே நான் தூக்கி பிடித்து ஆக வேண்டும். என் தலைவர்கள் கட்சியை கூப்பிட்டு தொண்டர்களை கூப்பிட்டு அவருடைய நிலைப்பாட்டை மாற்றும் பொழுது நானும் மாற்றி கொள்கிறேன்.
அதிமுக- பாஜக கூட்டணியை உடைக்க திட்டமா.?
ஆனால் இந்த கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா அவர்கள் ஒரு கருத்தை சொல்லிய பிறகு, அந்தக் கருத்தை நான் எப்படி மாற்றி கூற முடியும். அண்ணாமலை ஏதோ சொல்லி கூட்டணி உடைக்க பார்க்கிறார் என நான்கு பேர் கிளம்பி வருவார்கள். ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசிய கருத்தை நான் உறுதியாக இல்லை என்றால் பிஜேபி தொண்டனாக, தலைவனாக இருக்கவே தகுதி இல்லை.
அமித்ஷா அவர்கள் ஒரு முறை மட்டும் செல்லவில்லை மூன்று முறை மீண்டும் மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு மாற்றுக் கருத்து இருந்தால் கண்டிப்பாக அமித்ஷாவிடம் பேசலாம். கண்டிப்பாக பேசி முடிவெடுக்கலாம். தலைமை சொல்லாத வரை கட்சி எடுக்கும் முடிவுகள் இருந்து நான் எப்படி பின்னால் செல்வது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.