- Home
- Tamil Nadu News
- Admk Alliance : இபிஎஸ் சொன்ன பிரம்மாண்ட கட்சி இதுவா.? அப்படினா பாஜக அவுட்டா.? ஸ்டாலினிக்கு ஷாக் கொடுக்கும் அதிமுக
Admk Alliance : இபிஎஸ் சொன்ன பிரம்மாண்ட கட்சி இதுவா.? அப்படினா பாஜக அவுட்டா.? ஸ்டாலினிக்கு ஷாக் கொடுக்கும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணையவுள்ள பிரம்மாண்ட கட்சி குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எடப்பாடி குறிப்பிட்டு சொன்னது நாம் தமிழர் கட்சியா அல்லது விஜய்யின் தவெகவா.? என்ற விவாதம் எழுந்துள்ளது

சூடு பிடிக்கும் அரசியல் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கஅரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இதே போல எதிர்கட்சியான அதிமுகவில் தற்போது வரை பாஜக மட்டுமே கூட்டணியில் உறுதி செய்துள்ளது.
தமாக, ஐஜேகே, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி தொகுதி நிலவரங்களை அலசி ஆராய்த்து வருகிறது. ஓரணியில் தமிழகம் என 2 கோடி வாக்காளர்களை திமுகவில் இணைக்க வீடு வீடாக செல்லும் பணியை திமுக தொடங்கியுள்ளது. அப்போது திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து வருகிறது.
களத்தில் இறங்கிய திமுக- அதிமுக
மேலும் ஓன் டூ ஒன் மீட்டிங் நடத்தி கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களையும் பட்டியல் எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மக்கள் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
நேற்று கட்டுமன்னார் கோயிலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர், 7 கட்சிகளோடு திமுக கூட்டணி வைத்துள்ளது. ஏற்கனவே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கீங்க, எனவே அதிமு கூட்டணி பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கா.?
பாஜக கூட்டணி- இபிஎஸ் பதிலடி
அப்போ பாஜக இணித்தது இப்போ கசக்குதா, நங்கள் கூட்டணி வச்சா மத விரோத கட்சி, நீங்கள் கூட்டணி வச்சா நல்ல கட்சியா என கேள்வி எழுப்பினார். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு- கொள்கை வேறு, கொள்கையை அடமானம் வைக்கும் கட்சி திமுக என விமர்சித்தார். தேர்தல் வரும் போது திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறாமல் பெறுவதற்காகவே கூட்டணியை அமைக்கிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், ஒரு பெரிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது, பிரம்மாண்டமான கட்சி, எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள், வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே..
230 தொகுதிகளில் அதிமுக வெற்றி
பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்- நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதுமட்டுமில்லாமல் தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனையடுத்து எந்த கட்சி அதிமுகவில் இணையப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியா.? தவெகவா என்ற அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள்.
அதிமுக கூட்டணியில் பிரம்மாண்ட கட்சி
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் பெரும்பாலான இரண்டாம் கட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. மேலும் கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என தொடர்ந்து தகவலை வெளியிட்டு வருகிறது. இதனை அதிமுகவினருக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இப்படி இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
எனவே பாஜகவை கழட்டி விட்டு நடிகர் விஜய்யின் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க காய் நகர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறார். 50 % தொகுதி, துணை முதலமைச்சர் பதவி என தனது எதிர்பார்ப்பை கூறி வருவதால் இந்த கூட்டணி செட் ஆகுமா என கேள்வி எழுந்துள்ளது.
இதே போல சீமானின் நாம் தமிழர் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவை வீழ்த்த நாம் தமிழர் கட்சியை தங்கள் அணியில் இணைக்க ரகசிய பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக சொன்ன பிரம்மாண்ட கட்சி எது என அரசியல் விமர்சகர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.