MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • EPS ADMK : அமைச்சரவையில் இடம் கேட்ட அன்புமணி! ஒரே வார்த்தையில் முடித்த இபிஎஸ்! சைலண்ட் மோடில் பாமக!

EPS ADMK : அமைச்சரவையில் இடம் கேட்ட அன்புமணி! ஒரே வார்த்தையில் முடித்த இபிஎஸ்! சைலண்ட் மோடில் பாமக!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணி உருவாக்கத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கை வலுத்து வருகிறது. பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தெளிவான பதில் அளிக்காமல் உள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 17 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேர்தலுக்கு களம் இறங்கிய அரசியல் கட்சிகள்
Image Credit : our own

தேர்தலுக்கு களம் இறங்கிய அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணி நிலவரங்களை ஆராய்ந்து வருகிறது. செயல்வீரர்கள் கூட்டம், வாக்குசாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க 200 தொகுதிகளை இலக்காக கொண்டு காய் நகர்த்துகிறது.

 இதனை முறியடிக்க அதிமுகவும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆட்சியல் பங்கு கேட்கும் கட்சிகள்
Image Credit : x/@TVKPartyHQ

ஆட்சியல் பங்கு கேட்கும் கட்சிகள்

அடுத்தாக தேமுதிக, பாமகவிற்கும் தூது விட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் தவெகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யோ 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார். எனவே பாமக மற்றும் தேமுதிகவை நம்பியே அதிமுக உள்ளது. அதே நேரம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தமிழகத்தில் தற்போது வலுத்து வருகிறது. 

ஏற்கனவே நடிகர் விஜய் தங்களோடு கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என அறிவித்துள்ளது. இதே போல பாஜகவும் அதிமுக ஆட்சியில் பங்கு என மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி ஆட்சி என எந்த உறுதியும் அக்கட்சிகளுக்கு கொடுக்காமல் நழுவி வருகிறார்.

34
ஆட்சியில் பாமகவிற்கு பங்கு
Image Credit : facebook / ramadoss

ஆட்சியில் பாமகவிற்கு பங்கு

இந்த சூழ்நிலையில் பாமக தலைவராக உள்ள அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சமூக நீதி, மக்கள் உரிமைகளுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும். 

தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால், தமிழகத்தை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும்கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தை கூட்ட, அனைவரும் உறுதியேற்போம்' என்று தெரிவித்திருந்தார்.

44
அன்புமணிக்கு இபிஎஸ்
Image Credit : X/AIADMKITWINGOFL

அன்புமணிக்கு இபிஎஸ்

இந்த சூழ்நிலையில் தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மீண்டும் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என உறுதியாக கூறி வருகிறார். இதனிடையே அன்புமணியின் அமைச்சரவையில் பங்கு தொடர்பாக அறிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், 

சார், அவங்க வந்தா பாத்துக்கலாம் விடுங்க. ஏங்க, பந்தியிலயே உக்கார வைக்கல, இலை ஓட்டை என்றால் என்ன பண்ணுவது? என தக்லைப் பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரம் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆட்சியில் பங்கு கருத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் ஆட்சியில் பங்கு' என்று அன்புமணி கூறியது அவரது சொந்தக் கருத்து' என கூறி எண்ட் கார்டு போட்டுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
Edappadi Palanisamy: இவ்வளவு அசிங்கப்பட்டும் கூட்டணியில் தொடரணுமா? விசிகவிற்கு ஆசைக்காட்டும் இபிஎஸ்! திருமா ரியாக்‌ஷன் என்ன?
Recommended image2
வசமாக சிக்கிய திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ வேல்முருகன்! ஆக்‌ஷன் எடுக்க DGP-க்கு உத்தரவு! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved