MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • VS Babu : கட்சியைத் தாண்டிய பாசம்... வி.எஸ். பாபு உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்! இறுதி ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

VS Babu : கட்சியைத் தாண்டிய பாசம்... வி.எஸ். பாபு உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்! இறுதி ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

VS Babu's Funeral : கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மரணமடைந்ததை அடுத்து அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார் முதல்வர் விஜய். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 20 2026, 06:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
VS Babu's Funeral
Image Credit : X

VS Babu's Funeral

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏவாக இருந்தவர் வி.எஸ். பாபு. திடீரென ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சுமார் 70 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்திலும் தவெக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

VS Babu Net Worth : 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் வி.எஸ்.பாபுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வி.எஸ். பாபுவின் உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்!
Image Credit : X

வி.எஸ். பாபுவின் உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்!

இன்று வெள்ளிக்கிழமை மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உறவினர்கள் இறுதிச்சடங்குகளை முடித்த பின்னர், அவரது உடல் தகனம் செய்வதற்காக திருவிக நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது, வி.எஸ். பாபுவின் உடலை வீட்டிலிருந்து உறவினர்கள் வெளியே கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் முதல்வர் விஜய் முன்னே வந்து அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்றார். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வாகனத்தின் பின்னால் முதல்வர் விஜய்யும் மற்றவர்களுடன் நடந்து சென்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

VS Babu : யார் இந்த வி.எஸ்.பாபு? திமுக, அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்... தவெகவில் MLA ஆனது எப்படி? வியக்க வைக்கும் அரசியல் பயணம்

33
மகன்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்!
Image Credit : X

மகன்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்!

இறுதி ஊர்வலத்தின்போது வி.எஸ். பாபுவின் மகன்கள் தந்தையை இழந்த துயரத்தில் கதறி அழுதனர். அப்போது அவர்களிடம் நெருக்கமாகச் சென்ற முதல்வர் விஜய், அவர்களைத் தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார். திருவிக நகர் மின் மயானம் வரை நடந்து சென்ற அவர், இறுதிச்சடங்குகளிலும் பங்கேற்றார்.

இதுவரை எந்த சிஎம்மும் செய்யாத செயல் விஎஸ் பாபு இறுதி ஊர்வலத்தில் விஜய்

#ThalapathyVijay #CMVijay #VSBabu #Vijay #TamilNaduCM #TamilNaduPolitics #Humanity #Respect #FinalJourney #EmotionalMoment #TamilPolitics #TVK #TVKGovernment #PoliticalNews #TamilNadu https://t.co/F0QQCxDLQY

— பாசில் கிளியனூர் (@kiliyanurfazil) November 20, 2026

மின் மயானத்தில் உறவினர்கள் மேற்கொண்ட இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. உடலைத் தோளில் சுமந்தும், துயரத்தில் இருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தும் முதல்வர் விஜய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

VS Babu Passes Away : ஸ்டாலினையே தோற்கடித்தவர்... கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
விஜய் (நடிகர்)
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut : நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது? மின்வாரிய அறிவிப்பு!
Recommended image2
Now Playing
மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!
Recommended image3
இதெல்லாம் ரொம்ப தப்பு.. விஜய் அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்! சொன்னது என்ன?
Related Stories
Recommended image1
வி.எஸ்.பாபு மறைவு.. கொளத்தூரில் அடுத்த அரசியல் அதிரடி..? மீண்டும் களமிறங்கும் ஸ்டாலின்..?
Recommended image2
Now Playing
சென்னையில் வி.எஸ். பாபு காலமானார்: அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved