MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • VS Babu Passes Away : ஸ்டாலினையே தோற்கடித்தவர்... கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

VS Babu Passes Away : ஸ்டாலினையே தோற்கடித்தவர்... கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

Kolathur TVK MLA VS Babu Death : கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வி.எஸ்.பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 19 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வி.எஸ்.பாபு காலமானார்
Image Credit : Asianet News

வி.எஸ்.பாபு காலமானார்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வி.எஸ்.பாபு. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான இவர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு 75 வயதாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட வி.எஸ்.பாபு
Image Credit : Asianet News

மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட வி.எஸ்.பாபு

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

தொடக்கத்தில் மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு புதிய மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. இதனால் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும் எழுந்தது.

34
50 நாட்களுக்கு மேல் சிகிச்சை
Image Credit : x

50 நாட்களுக்கு மேல் சிகிச்சை

இதற்கிடையே தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், மருத்துவமனைக்குச் சென்று வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல் அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இருப்பினும், வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 50 நாட்களைக் கடந்த நிலையிலும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. அவர் எப்படியிருக்கிறார், எப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்பது தொடர்பான விவரங்கள் தெரியாமல் தொகுதி மக்களும் கவலை அடைந்திருந்தனர்.

44
நீதிமன்றத்தில் வழக்கு
Image Credit : X/Theechatti

நீதிமன்றத்தில் வழக்கு

இந்தச் சூழலில், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவரது உடல்நிலை குறித்து முறையான அரசு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வி.எஸ்.பாபுவின் தனிப்பட்ட மருத்துவ விவரங்களையோ, ரகசிய மருத்துவ ஆவணங்களையோ வெளியிட வேண்டும் என்பது தனது கோரிக்கை அல்ல என்றும் மனுதாரர் தெளிவுபடுத்தியுள்ளார். சட்டப்படி பொதுமக்களுக்குத் தெரிவிக்கக்கூடிய தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே வி.எஸ்.பாபு உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் தவெக-வினர் மட்டுமின்றி கொளத்தூர் மக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஆறு மாத ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !
Recommended image2
Now Playing
காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் ஒழிக்க முடியாது: சென்னை செய்தியாளர் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேச்சு
Recommended image3
Who is Sheru Bhai : யார் இந்த ஷேரு பாய்? இணையத்தை கலக்கும் AI சிங்கம்.. வைரலாகும் மாஸ் வீடியோக்கள்!
Related Stories
Recommended image1
VS Babu: தீவிர சிகிச்சையில் வி.எஸ். பாபு.. தற்போது எப்படி இருக்கிறார்? கொளத்தூர் மக்கள் எதிர்பார்ப்பு
Recommended image2
Now Playing
பொதுமக்கள் சிரமம் தவிர்க்க அதிரடி நடவடிக்கை எடுத்த வி.எஸ்.பாபு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved