இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:12 PM (IST) Nov 16
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணியாளர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது எதிர்கால திட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்றார். பிரதமருடன் கலந்துரையாடலில், பணியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
10:57 PM (IST) Nov 16
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) 2026-க்காக, வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய இந்த வழிகாட்டி உதவுகிறது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
09:36 PM (IST) Nov 16
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பீகாரில் அமையவிருக்கும் என்.டி.ஏ. அரசுக்கு தனது ஜன் ஜன்தந்திர தள் கட்சியின் 'தார்மீக ஆதரவை' அறிவித்துள்ளார். மேலும், தனது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்கு பதவியை வழங்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
09:03 PM (IST) Nov 16
டெஸ்லாவின் 'ஆப்டிமஸ்' மனித உருவ ரோபோக்கள் எதிர்காலத்தில் அதிநவீன அறுவை சிகிச்சைகளைச் செய்யும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த ரோபோக்கள் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய முடியும் என அவர் நம்புகிறார்.
07:50 PM (IST) Nov 16
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில், தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் உன் நபியின் முக்கிய கூட்டாளியான அமீர் ரஷீத் அலியை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
07:07 PM (IST) Nov 16
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
06:30 PM (IST) Nov 16
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், 2028-ல் சந்திரயான்-4 திட்டம் மற்றும் 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். ககன்யான் திட்டம் 2027-ல் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
05:26 PM (IST) Nov 16
லக்னோவைச் சேர்ந்த மனு ஸ்ரீவாஸ்தவா, நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பரிசோதனையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக ரஷ்ய அரசு பதிலளித்துள்ளது.
05:22 PM (IST) Nov 16
IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்வி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
04:52 PM (IST) Nov 16
ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேடு செய்யப்பட்டதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜடேஜா விருப்பப்பட்டு தான் அங்கு சென்றதாக ராஜஸ்தான் உரிமையாளர் கூறியுள்ளார்.
04:49 PM (IST) Nov 16
karthigai matha rasi palan 2025 kanni: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:29 PM (IST) Nov 16
Karthigai Matha Rasi Palan for simma rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:09 PM (IST) Nov 16
Karthigai Matha Rasi Palan for kadaga rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:07 PM (IST) Nov 16
India’s 1st Test Defeat vs SA Reasons Explained: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 5 காரணங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
04:01 PM (IST) Nov 16
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
04:01 PM (IST) Nov 16
Mahesh Babu as Rama Role in Varanasi Movie : ராமாயணத்தின் முக்கிய கட்டத்தை மையமாக வைத்து 'வாரணாசி' என்ற படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் மகேஷ் பாபு ராமனாக நடிக்கிறார். ஆனால், ராமனாக மகேஷ் பாபு பொருந்துவாரா என்ற சந்தேகம் இருந்தது.
03:52 PM (IST) Nov 16
Mithuna Rasi Karthigai Month Rasi Palan: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:30 PM (IST) Nov 16
Komban Movie vs Karthigai Deepam 2 Serial : கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை காப்பியடித்து கார்த்திகை தீபம் 2 சீரியலின் கும்பாபிஷேக காட்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
03:18 PM (IST) Nov 16
Do you know Keerthy Suresh First Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?
03:15 PM (IST) Nov 16
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மூலம் மருத்துவர்களுக்கு ரூ.20 லட்சம் ஹவாலா பணம் கிடைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க உரம் வாங்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
03:05 PM (IST) Nov 16
Karthigai Matha Rasi Palan for rishaba rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:45 PM (IST) Nov 16
Mesha Rasi Karthigai Month Rasi Palan: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:44 PM (IST) Nov 16
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
02:06 PM (IST) Nov 16
டிஜிட்டல் தங்க முதலீடுகள் அதன் கட்டுப்பாட்டில் இல்லை என செபி எச்சரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. சிறிய தொகையில் முதலீடு செய்ய எளிதாக இருந்தாலும், நிறுவனம் திவாலானால் பணத்தை இழக்க நேரிடும்.
02:05 PM (IST) Nov 16
Red Card Eviction in Bigg Boss tamil 9: 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் இந்த வாரம், கனி எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு போட்டியாளர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
01:59 PM (IST) Nov 16
Temples for child boon in tamilnadu: குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் பல சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து திருக்கோயில்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
01:53 PM (IST) Nov 16
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது இயல்பை விட 7% குறைவாக பதிவாகியுள்ளது.
01:41 PM (IST) Nov 16
தமிழகத்தில் தவெக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து செல்வபெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
12:52 PM (IST) Nov 16
Pandian And Palanivel Uncle in Law Relationships Breaks : காந்திமதி ஸ்டோர்ஸ் என்று பழனிவேல் தன்னுடைய கடைக்கு எதிராக கடையை திறந்த நிலையில் பாண்டியனுக்கும், பழனிவேலுவிற்குமான உறவில் விரிசில் ஏற்பட்டுள்ளது.
12:45 PM (IST) Nov 16
Mahalakshmi Rajyog lucky zodiac signs: விருச்சிக ராசியில் விரைவில் செவ்வாய் மற்றும் சந்திர பகவான் இருவரும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
12:43 PM (IST) Nov 16
ஹூண்டாய் அயோனிக் 5 எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 631 கிமீ ரேஞ்ச் மற்றும் நவீன அம்சங்களுடன் வரும் இந்த காரின் தள்ளுபடி விவரங்களை டீலர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
12:27 PM (IST) Nov 16
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக விஜய்யின் தவெக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தவெக தொண்டர்கள் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
12:23 PM (IST) Nov 16
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான போக்கோ, விரைவில் F8 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் 6,500mAh பேட்டரி மற்றும் 16GB RAM உடன் வரலாம். மேலும் இதுதொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை விரிவாக பார்க்கலாம்.
12:22 PM (IST) Nov 16
Mahesh Babu and Priyanka Chopra Missed Movie : மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலி படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பு மகேஷ் பாபு - பிரியங்கா சோப்ரா காம்போவில் மிஸ்ஸான ஒரு படம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
12:10 PM (IST) Nov 16
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆறு மாநிலங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. பலத்த பாதுகாப்புடன் செங்கோட்டை மீண்டும் திறக்கப்படுகிறது.
11:52 AM (IST) Nov 16
இந்தியாவில் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் CNG கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 CNG கார்களின் விலை, அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
11:43 AM (IST) Nov 16
Prithviraj Sukumaran Talk About Varanasi Story : குளோப் ட்ராட்டர் நிகழ்வில், ராஜமௌலியின் வாரணாசி படக்கதையைக் கேட்டு ஆச்சரியமடைந்ததாக பிருத்விராஜ் சுகுமாரன் கூறியுள்ளார். 5 நிமிடங்களிலேயே அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
11:36 AM (IST) Nov 16
Mars Transit Sagittarius December 2025: டிசம்பர் மாதத்தில் செவ்வாய் பகவான் தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11:34 AM (IST) Nov 16
Palanivel Open Gandhimathi Stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோ வீடியோவை விஜய்டிவி வெளியிட்டுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
11:26 AM (IST) Nov 16
Shubman Gill Out; India Struggle in 124-Run Chase: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகியுள்ளார். 124 ரன்களை சேஸ் செய்ய பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 2 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.