MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரெட்மி K90 Pro Max ரீபிராண்ட்.? தெறிக்க விடும் போக்கோ F8 அல்ட்ரா - அம்சங்கள் இதோ

ரெட்மி K90 Pro Max ரீபிராண்ட்.? தெறிக்க விடும் போக்கோ F8 அல்ட்ரா - அம்சங்கள் இதோ

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான போக்கோ, விரைவில் F8 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் 6,500mAh பேட்டரி மற்றும் 16GB RAM உடன் வரலாம். மேலும் இதுதொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Raghupati R
Published : Nov 16 2025, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
போக்கோ F8 அல்ட்ரா
Image Credit : Google

போக்கோ F8 அல்ட்ரா

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான போக்கோ, விரைவில் புதிய F8 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்கோ F8 Pro மற்றும் F8 Ultra பல சான்றிதழ் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கீக்பெஞ்சில் இடம்பெற்றுள்ள F8 Ultra, கடந்த மாதம் சீனாவில் வெளியான Redmi K90 Pro Max மாடலின் ரீபிராண்டட் பதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 Elite Gen 5

25102PCBEG என்ற மாடல் எண்ணுடன் கீக்பெஞ்சில் பட்டியலான F8 Ultra, ஸ்னாப்டிராகன் 8 Elite Gen 5 சிப்செட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 16GB RAM கொண்டதாகவும், Android 16 அடிப்படையிலான HyperOS 3-ல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. Redmi K90 Pro Max போன்ற அம்சங்கள் இதில் கிடைக்கலாம். ஆனால் பேட்டரி திறன் மட்டும் சிறிய மாற்றத்துடன் வரும். K90 Pro Max-l 7,500mAh இருந்தாலும், போக்கோவின் புதிய மாடல் 6,500mAh பேட்டரியுடன் வரலாம்.

22
பெரிய OLED டிஸ்ப்ளே + மேம்பட்ட கேமரா
Image Credit : Google

பெரிய OLED டிஸ்ப்ளே + மேம்பட்ட கேமரா

வரவிருக்கும் F8 Ultra-வில் 6.9 இன்ச் 2K OLED திரை 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என தகவல் வெளியாகி உள்ளது. பின்புறத்தில் 50MP டிரிபிள் கேமரா, அதில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50MP முன்புற கேமரா வழங்கப்படலாம். 12GB+256GB மற்றும் 16GB+512GB என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில், நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ F7 அல்ட்ரா

மறுபுறம், ஏற்கனவே சந்தையில் இருக்கும் போக்கோ F7 Ultra, Snapdragon 8 Elite சிப்செட்டில் இயங்குகிறது. 5,300mAh பேட்டரியுடன் 120W கம்பி மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP முன்புற கேமரா கொண்ட இது Aqua Blue, Chrome Silver, Carbon Black நிறங்களில் விற்பனையாகிறது. நடுத்தர விலை ஸ்மார்ட்போன்களில் போட்டியை அதிகரிக்கும் வகையில் போக்கோ தொடர்ந்து விற்பனையை உயர்த்தி வருகிறது.

Related Articles

Related image1
என்னா ஸ்பீடு.. இந்தியாவின் சக்திவாய்ந்த மொபைல் வருது.. கடல்லயே இல்லையாம்!
Related image2
பாதுகாப்பு இனி ஈஸி: ₹1,500-க்குள் அசத்தும் 5 CCTV கேமராக்கள்! Qubo முதல் EZVIZ வரை.. அம்சங்கள் அள்ளுது!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved