- Home
- Astrology
- Karthigai Matha Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் உங்களுக்கு எச்சரிக்கை மணி.! இந்த விஷயங்களில் கவனம்.!
Karthigai Matha Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் உங்களுக்கு எச்சரிக்கை மணி.! இந்த விஷயங்களில் கவனம்.!
Karthigai Matha Rasi Palan for rishaba rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
கார்த்திகை மாதம் 2025 - ரிஷப ராசி பலன்கள்
கார்த்திகை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான திருப்புமுனைகளையும், சவால்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
கிரக நிலைகள்:
- மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரனின் சாதகமான நிலை காரணமாக வியாபாரத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- சனி பகவான் லாப ஸ்தானமான 11-வது வீட்டில் இருப்பதால் வருமானம் பெருகும்.
- குருவின் சஞ்சாரமானது ஓரளவு நன்மையை தரக் கூடும்.
பொதுவான பலன்கள்:
- ரிஷப ராசி நேயர்களே, கார்த்திகை மாதம் எதிர்பாராத புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இந்த மாதத்தில் வேகமாக முடிவுக்கு வரும். சில நேரங்களில் மனச்சோர்வு அதிகமாக கூடும். எளிதான காரியங்கள் கூட கடினமாகலாம்.
- பழைய வாகனங்கள் வாங்குவது, துண்டித்துப் போன பழைய உறவுகளை மீண்டும் இணைத்துக் கொள்வது போன்ற விஷயங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
நிதி நிலைமை:
- ரிஷப ராசியின் லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் வருமானம் சீராக இருக்கும். புதிய வழிகளில் பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் சாதகமான நிலை வெற்றியைத் தரும். அரசுத் துறைகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- இருப்பினும் நிதி முடிவுகளை மிகவும் கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
வேலை மற்றும் தொழில்:
- உழைப்பவர்கள் கடின உழைப்பை மட்டும் நம்புவது நல்லது. குறுக்கு வழிகளை தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் வேலையில் சிக்கல்கள் அதிகரிக்கலாம்.
- உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரமும், வெகுமதியும் கிடைக்கும். தொழில் வல்லுனர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகம் செய்து வருபவர்களுக்கு பலனுள்ள மாதமாக இருக்கும். வணிகர்கள் எதிர்பார்த்த ஆர்டர்களைப் பெறுவீர்கள். இது நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.
குடும்ப உறவுகள்:
- குடும்ப வாழ்க்கையில் இந்த மாதம் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். கேது மற்றும் ராகுவின் நிலை காரணமாக வீட்டில் சமநிலையற்ற சூழல் ஏற்படலாம்.
- தம்பதிகளிடையே புரிதலின்மை மற்றும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெற்றோரின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
- மாதத்தின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். சில தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
- தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு கல்வியில் இடையிடையே தடங்கல்கள் வந்தாலும் கவனச்சிதறல்கள் இல்லாமல் படிக்க வேண்டியது அவசியம். மாதத்தின்
- முதல் பாதி சமூகமாக இருந்தாலும், பிற்பாதியில் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரங்கள்:
- கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதம் என்பதால் திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் சென்று வழிபடலாம்.
- ஆலயங்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
- திருவண்ணாமலை தீப தினத்தன்று வீட்டில் ஒற்றைப்படையில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
- இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos