பேமிலி கார் வாங்க ஐடியா இருக்கா.? ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த CNG கார்கள்
இந்தியாவில் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் CNG கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5 CNG கார்களின் விலை, அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் CNG கார்கள்
இந்தியாவில் குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் கார் வாங்க நினைப்பவர்களுக்கு, தற்போது CNG வாகனங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இயங்கும் செலவு குறைவாக இருப்பதால், 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் இந்த நவீன CNG கார்கள் குடும்பங்கள், அலுவலக பயணிகள் என பலராலும் விரும்பப்படுகின்றன. விலை குறைந்தாலும், பாதுகாப்பு, வசதி, அம்சங்கள் ஆகியவற்றில் எந்தத் தளர்வும் இல்லை.
மாருதி
முதலில் வருவது மாருதி S-Presso. மைக்ரோசாப்ட் SUV வடிவில் வந்துள்ள இந்த மாடல், மைலேஜ் மற்றும் பணத்திற்கான மதிப்பு நாடுபவர்களுக்கு சிறந்த தேர்வு. 1.0 லிட்டர் DualJet என்ஜினுடன் வரும் S-Presso CNG, CNG மாடல் 57 PS பவரும், 82.1 Nm டார்க்கும் வழங்குகிறது. 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும் இந்தக் காரின் விலை ரூ.4.62 லட்சம் முதல் ரூ.5.12 லட்சம் வரை உள்ளது.
டாடா டியாகோ
டாடா டியாகோ CNG கார் பாதுகாப்பு, கட்டுமானத் தரம், ஓட்டுநர் நம்பிக்கை ஆகியவற்றில் மிகச்சிறந்த பெயர் பெற்ற மாடல். 1.2 லிட்டர் என்ஜினுடன் 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் AMT ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் விருப்பங்களும் வழங்கப்படுகிறது. CNG மாடல் 73 PS பவர், 95 Nm டார்க் கிடைக்கிறது. விலை ரூ.5.49 லட்சம் முதல் ரூ.7.82 லட்சம் வரை.
வேகன் ஆர்
அடுத்து இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது வேகன் ஆர். இந்த கார் நகர்புற பயணிகளின் எவர்க்ரீன் விருப்பம் ஆகும். எளிய வடிவமைப்பு, குறைந்த பராமரிப்பு செலவு, அதிக மீள்விலை (மறுவிற்பனை மதிப்பு) போன்ற காரணங்களால் முதல் கார் வாங்குபவர்கள் பெரும்பாலும் Wagon R CNG-யையே தேர்வு செய்கிறார்கள். 57 PS பவர் மற்றும் 82.1 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. விலை ரூ.5.89 லட்சம் முதல் ரூ.6.42 லட்சம்.
பட்ஜெட் கார்
சிறந்த டிரைவிங் கம்பர்ட் மற்றும் பிரீமியம் இன்டீரியர் தேடுபவர்களுக்கு Hyundai Grand i10 Nios CNG நல்ல தேர்வு. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த மாடல், CNG மாடல் 69 PS பவர் மற்றும் 95.2 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும் இந்த மாதலின் விலை ரூ.7.17 லட்சம் முதல் ரூ.7.67 லட்சம்.
மாருதி ஸ்விப்ட்
இறுதியாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது Maruti Swift CNG. இந்தியர்களின் நீண்டநாள் பிரியமான கார். 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன், CNG மோடில் 70 PS பவரும், 102 Nm டார்க்கும் வழங்குகிறது. எப்போதும் போல 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. விலை ரூ.7.45 லட்சம் முதல் ரூ.8.39 லட்சம். மைலேஜ், செயல்திறன், நம்பகத்தன்மை-ஆல் இன் ஒன் காராக இது உள்ளது.