- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்தியின் கொம்பன் பட காட்சியை காப்பியடித்த கார்த்திகை தீபம் 2 சீரியல் – சாமியாடி வேட்டைக்கு செல்லும் ராஜராஜன்!
கார்த்தியின் கொம்பன் பட காட்சியை காப்பியடித்த கார்த்திகை தீபம் 2 சீரியல் – சாமியாடி வேட்டைக்கு செல்லும் ராஜராஜன்!
Komban Movie vs Karthigai Deepam 2 Serial : கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை காப்பியடித்து கார்த்திகை தீபம் 2 சீரியலின் கும்பாபிஷேக காட்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

வேட்டைக்கு செல்லும் ராஜராஜன் - கார்த்திகை தீபம் 2 சீரியல்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ராஜ்கிரண், கார்த்தி, லட்சுமி மேனன், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் கொம்பன். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ராஜ்கிரண் சாமி ஆடி வேட்டைக்கு செல்வது போன்று அவரது மருமகனான கார்த்தி அவரது உயிரை காப்பாற்றுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டது.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
சாமியாடி ஊரை சுற்றி வந்த பிறகு மகள் மற்றும் மருமகனுக்கு விபூதி பூசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதே போன்று தான் இப்போது கார்த்திகை தீபம் 2 சீரியலிலும் காட்சி இடம் பெறுகிறது. மாமனார் ராஜராஜனின் உயிருக்கு காளியம்மா மற்றும் சிவனாண்டியால் ஆபத்து ஏற்படுகிறது. அவருக்கு பாதுகாப்பாக கார்த்திக் இருப்பதாக கூறியிருக்கிறார். கும்பாபிஷேகம் நடக்க வேண்டுமானாலும் ராஜராஜன் சாமியாடி ஊரைச் சுற்றி வந்து அருள் கொடுக்க வேண்டும்.
மாமனாரை காப்பாற்றும் கார்த்திக்
அப்படி அவர் ஊரைச் சுற்றி வரும் போது சிவனாண்டியாட்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கார்த்திக் எப்படி தனது மாமனாரை காப்பாற்றி இந்த கும்பாபிஷேகத்தை நடத்துகிறார் என்பது தான் இன்று ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலின் காட்சிகள். ஆரம்பத்தில் சிவனாண்டிக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் பகையாக இருந்தது. ஆனால், அவருக்கு பக்க பலமாக கார்த்திக் இருக்கும் நிலையில், அவரை கொல்லவும் முயற்சி நடந்தது.
ராஜராஜன் உயிருக்கு ஆபத்து
கடைசியாக இப்போது குடும்பத்துக்கு வச்ச குறியாக கார்த்திக்கின் மாமனார் ராஜராஜனுக்கு எதிரான பிளான் போடப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் 2 மணி நேர எபிசோடாக கும்பாபிஷேகம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஞாயிறு ஸ்பெஷலாக கார்த்திக் மாதம் பிறப்பதற்கு முன்பு கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க திட்டமிட்ட நிலையில் இன்று கும்பாபிஷேக எபிசோடு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.