இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆசிய கோப்பை 2025 செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:41 PM (IST) Sep 07
Ghaati Box Office Collection Day 2 Report : அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான காட்டி படம் அனுஷ்காவிற்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது.
11:20 PM (IST) Sep 07
Kajol Achieved in Bollywood after Body Sharming : காஜலின் ஊக்கமளிக்கும் பயணம் : பாலிவுட்டின் மூத்த நாயகி காஜல் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கடுமையான அவமானங்களையும், உடல் தோற்றத்தை இழிவுபடுத்தும் கருத்துகளையும் எதிர்கொண்டார்.
11:14 PM (IST) Sep 07
10:39 PM (IST) Sep 07
Sridevi Baahubali Shivagami Role Rejection Reason :ஸ்ரீதேவி - போனி கபூர்: பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்ததற்கான காரணத்தை அவரது கணவர், இயக்குநர் போனி கபூர் விளக்கியுள்ளார்.
10:30 PM (IST) Sep 07
மலையாள சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமான மோகன்லால், பல தசாப்தங்களாக வெள்ளித்திரையில் மட்டுமல்ல, தனது படங்கள், வணிகங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியுள்ளார்.
10:27 PM (IST) Sep 07
09:50 PM (IST) Sep 07
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் என கூறப்படுகிறது.
08:50 PM (IST) Sep 07
2026 சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் - விஜய் இடையே நீண்டகால நட்பு உள்ளதாகவும், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
07:52 PM (IST) Sep 07
07:21 PM (IST) Sep 07
பெங்களூருவில் ஒரு காரின் சன்ரூஃபிலிருந்து தலையை வெளியே நீட்டிய சிறுவனுக்கு நேர்ந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்ரூஃப் பயன்பாடு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ள இந்தச் சம்பவம், சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
05:53 PM (IST) Sep 07
கல்கத்தாவில் பிறந்தநாள் கொண்டாடும்போது 20 வயது பெண் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது நண்பருடன் உணவகத்திலிருந்து திரும்பி வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
05:20 PM (IST) Sep 07
செப்டம்பர் 10 முதல் துவங்கும் ஆசியக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இரட்டை சாதனை படைக்க உள்ளார்.
04:49 PM (IST) Sep 07
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 385 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிகள், சம்பளம் மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்கள் இங்கே.
04:47 PM (IST) Sep 07
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
04:47 PM (IST) Sep 07
கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூல நோய் வர ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
04:32 PM (IST) Sep 07
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கும் 10 நிமிட ஃபிளாஷ் விற்பனை: iPhone 17 மற்றும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு 90% வரை தள்ளுபடி. விற்பனை மற்றும் பிற சலுகைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
04:30 PM (IST) Sep 07
Allu Arjun act cameo Role for Ram Charan hit Movie : ராம் சரணுக்காக அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் எதுவென்று தெரிந்து கொள்வோம்.
04:19 PM (IST) Sep 07
கர்நாடகாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோரின் வாகனங்களுக்கான அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளன.
04:04 PM (IST) Sep 07
சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஐடிஆர்-1 ஐப் பயன்படுத்தி பணத்தை திரும்பப் பெற தாக்கல் செய்யலாம். புதிய மற்றும் பழைய வரி விதிமுறைகளின் கீழ் உள்ள வரி அடுக்குகளை அறிந்து கொள்வது அவசியம்.
03:44 PM (IST) Sep 07
பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்படப் பலரும் காயமடைந்துள்ளனர்.
03:44 PM (IST) Sep 07
Gen Z மாணவர்களின் இன்டர்ன்ஷிப்கள் மெய்நிகர், உலகளாவிய மற்றும் AI திறன்களால் மாற்றமடைந்துள்ளன. இந்த இன்டர்ன்ஷிப்கள் எவ்வாறு நவீன வேலை உலகிற்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
03:31 PM (IST) Sep 07
இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் போனில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அதை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி அறியுங்கள்.
03:22 PM (IST) Sep 07
தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03:20 PM (IST) Sep 07
எக்ஸ் (X) தளத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா? தினசரி ஒரு பதிவை மட்டும் போட்டால் போதும் என அதன் தயாரிப்புத் தலைவர் கூறுகிறார். பணம் சம்பாதிக்க ஒரு எளிய வழிமுறையை இங்கே அறியுங்கள்.
03:19 PM (IST) Sep 07
03:18 PM (IST) Sep 07
Kathir Saves Raji in Pandian Stores 2 : குடும்பத்தில் மூத்தவர்களின் பேச்சைக் கேட்காமல் சென்னைக்குப் புறப்பட்டு சென்ற ராஜீ பாதியிலேயே வீடு திரும்பிய நிலையில் என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:09 PM (IST) Sep 07
இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு கன்சல்டன்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதிகள், விண்ணப்ப விவரங்கள் மற்றும் கடைசி தேதி குறித்து அறியுங்கள்.
03:08 PM (IST) Sep 07
ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உக்ரைன் மீது மிக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கீவ்வில் உள்ள அரசாங்க கட்டிடங்கள் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
02:58 PM (IST) Sep 07
கிரிப்டோகரன்சி மோசடிகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. பிக் புட்சரிங், ரக் புல்ஸ் போன்ற மோசடிகள் மூலம் உங்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
02:58 PM (IST) Sep 07
சிறிய நிறுவன பங்குச்சந்தை நிதிகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்றாலும், நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரக்கூடியவை. முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
02:47 PM (IST) Sep 07
கழிவறையில் செல்போன் பயன்படுத்துவது மூலநோய் அபாயத்தை 46% அதிகரிக்கிறது என்கிறது புதிய ஆய்வு. இதன் இணைப்பு என்ன, உங்களை எப்படி பாதுகாப்பது?
02:08 PM (IST) Sep 07
Prabhas Aadhaar Card Photo Leaked Online :பான் இந்தியா நாயகன், பிரபல நடிகர் பிரபாஸின் ஆதார் கார்டு எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? அதுல அவருடைய உண்மையான பெயர் என்னன்னு தெரியுமா? அப்படியே, பிரபாஸின் இயற்பெயர் என்ன?
01:57 PM (IST) Sep 07
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
01:24 PM (IST) Sep 07
01:20 PM (IST) Sep 07
நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
01:09 PM (IST) Sep 07
Pandian Stores 2 Serial This Week Promo Video : டான்ஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த ராஜீ ஆபத்தில் சிக்கிய நிலையில் அவரைக் காப்பற்ற கதிரி வந்த நிலையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
12:51 PM (IST) Sep 07
செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமாவின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
12:41 PM (IST) Sep 07
உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
12:34 PM (IST) Sep 07
12:04 PM (IST) Sep 07
அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி 5ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார்.