ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உக்ரைன் மீது மிக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கீவ்வில் உள்ள அரசாங்க கட்டிடங்கள் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.

ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உக்ரைன் மீது தனது மிக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்கள் இருக்கும் கீவ் நகரம் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

கீவ்வில் உக்ரைன் அமைச்சரவைக் கட்டிடத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, பெரிய புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள் கீவ்வில் உள்ள பல உயரமான கட்டிடங்களை சேதப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதல்:

ரஷ்யா சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்கு இடையில் உக்ரைன் மீது குறைந்தபட்சம் 805 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில், கீவ்வில் அஉள்ள ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு தாயும் அவரது இரண்டு மாத குழந்தையும் கொல்லப்பட்டனர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு ஜபோரிஷியா பகுதியில் நடந்த ஒரு தாக்குதலிலும் இருவர் பலியானார்கள்.

புடின் எச்சரிக்கை:

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை உக்ரைனுக்கு அனுப்ப முன்வந்தன. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் எந்தவொரு மேற்கத்திய படைகளும் இருப்பதை ஏற்க முடியாது என்றும், அப்படி இருந்தால் அவை ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகும் என்றும் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் நிலைப்பாடு:

மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரில் ரஷ்யா சுமார் 20 சதவீத உக்ரைன் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறிவருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சித்த போதிலும், ரஷ்யா தனது கடுமையான கோரிக்கைகளை கைவிடவில்லை.

ஜெலென்ஸ்கியின் கண்டனம்:

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாடு முழுவதும் அவசரகால சேவைகள் செயல்பட்டு வருவதாகக் கூறினார். தனது பேஸ்புக் பக்கத்தில், "இத்தகைய கொலைகள் ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றம். போரை நீட்டிக்கும் செயல்" என்று சாடியுள்ளார்.