செப்டம்பர் 8, 2025 அன்று ஈத்-இ-மிலாதுன் நபிக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், NSE மற்றும் BSE வழக்கம்போல் செயல்படும். 2025 பங்குச்சந்தை விடுமுறைப் பட்டியலில் செப்டம்பர் மாதத்தில் எந்த வர்த்தக விடுமுறையும் இல்லை.
மகாராஷ்டிரா அரசு செப்டம்பர் 8, 2025 (திங்கட்கிழமை) அன்று ஈத்-இ-மிலாதுன் நபி தினத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் முஸ்லிம் சமூகத்தினர் ஊர்வலங்களை நடத்துவதால், அரசு பொதுவிடுமுறையாக தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினம் NSE, BSE போன்ற பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நடைபெறுமா என்பது குறித்து முதலீட்டாளர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான பங்குச்சந்தை விடுமுறைப் பட்டியலின்படி, செப்டம்பர் மாதத்தில் எந்த வர்த்தக விடுமுறையும் இல்லை. அதாவது சனி, ஞாயிறு தவிர, NSE மற்றும் BSE-யில் வழக்கம்போல தினசரி வர்த்தகம் நடைபெறும். எனவே, செப்டம்பர் 8, 2025 அன்று பங்குச்சந்தை இயல்பாக திறந்திருக்கும்.
2025 ஆண்டு முழுவதும் அடுத்ததாக அக்டோபரில் மூன்று முக்கிய வர்த்தக விடுமுறைகள் உள்ளன. அவை – அக்டோபர் 2 (மகாத்மா காந்தி ஜெயந்தி/தசரா), அக்டோபர் 21 (தீபாவளி), அக்டோபர் 22 (தீபாவளி பாலிபிரதிபதா), மேலும், நவம்பர் 5 (குருநானக் ஜெயந்தி) மற்றும் டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) ஆகிய தினங்களும் பங்குச்சந்தை மூடப்பட்டிருக்கும்.
சந்தை முதலீட்டாளர்கள் குழப்பம் அடையாமல் இருக்க, BSE மற்றும் NSE-வின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் Holiday Calendar-ஐப் பார்க்கலாம். bseindia.com-ல் “வர்த்தக விடுமுறைகள்” பிரிவில் 2025க்கு உரிய முழுமையான பட்டியல் தரப்பட்டுள்ளது.
