கடைசி வாய்ப்பு.! ITR தாக்கல் தேதி நீட்டிப்பு.. அபராதம் தவிர்க்க இதை செய்யுங்க
வரி செலுத்துபவர்கள் தாமதிக்காமல் உடனடியாக ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும்.

வருமானவரி ரிட்டர்ன் தேதி
இந்திய வருமான வரித்துறை, ஐடிஆர் (ITR) தாக்கல் செய்யும் கடைசி தேதியை நீட்டித்து கூறியது. முதலில் ஜூலை 31ஆம் தேதி வரை தாக்கல் செய்ய வேண்டும் என இருந்த நிலையில், தற்போது அது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், கவனிக்க வேண்டியது என்னவென்றால் டாக்ஸ் ஆடிட் செய்யும் கடைசி தேதி செப்டம்பர் 30 அன்றுதான் இருக்கும்.
வரி செலுத்துபவர்கள்
அதனால், வரி செலுத்துபவர்கள் தாமதிக்காமல் உடனடியாக ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அண்மைய தரவுகள் படி, இன்று 3 கோடி வரி செலுத்துபவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த பட்டியலில் இருந்தால், அடுத்த 12 நாட்களுக்குள் தாக்கல் செய்து விடுங்கள். இல்லையெனில் அபராதங்களும், பல்வேறு பிரச்சனைகளும் உங்களை எதிர்கொள்ளக்கூடும்.
வருமான வரித்துறை
நீங்கள் கடைசி தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டம் பிரிவு 234F படி, உங்கள் வருட வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் என்றால் ரூ.5000 அபராதம் கட்ட வேண்டி வரும். வருமானம் ரூ.5 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், அபராதம் ரூ.1000 மட்டுமே.
ஐடிஆர் தாக்கல்
அதுமட்டுமல்லாமல், வட்டி கட்டும் சுமை கூட உங்களுக்கு வரும். பிரிவு 234A படி, கடைசி தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யும் ஒவ்வொரு மாதத்திற்கும் 1% வட்டி விதிக்கப்படும். இந்த வட்டி கணக்கு, கடைசி தேதி முடிந்த அடுத்த நாளிலிருந்து துவங்கும். அதனால், தாமதத்தால் தேவையற்ற வட்டி செலவுகள் கூட அதிகரிக்கும்.
வரி ஆடிட் கடைசி தேதி
மேலும், பிரிவு 139 (1) படி, சரியான நேரத்தில் தாக்கல் செய்யாவிட்டால், சில வரி சலுகைகள், விலக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும், பிரிவு 270A படி, உங்களுக்குத் தகுந்த வருமானம் இருந்தும் ஐடிஆர் தாக்கல் செய்யாமல் இருந்தால், 50% வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, தேவையற்ற அபராதம், வட்டி, சலுகை இழப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, உடனே ஐடிஆர் தாக்கல் செய்வது மிக அவசியம்.