இன்றைய TOP 10 செய்திகள்: லண்டனில் ஸ்டாலின்... ரஷ்யாவின் கேன்சர் மருந்து...
டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரனை விமர்சித்தார். சத்யபாமாவின் பதவி பறிப்பு, புதிய புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை என பல செய்திகள்.

நயினார் என்னை கட்டுப்படுத்த முடியாது
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்க விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை சரியாக கையாண்டார் ஆனால் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை, நான் NDA வில் வெளியேற யாரும் காரணமல்ல, என் தொண்டர்களின் விருப்பம் தான் என தெரிவித்தார்.
சத்யபாமா பதவி பறிப்பு!
செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமாவின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி பொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்.பி சத்யபாமா விடுவிக்கப்பட்டுள்ளார்.
கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்
அதிமுக கட்சி பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவியை துறந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
புற்றுநோய்க்கு மருந்து வந்தாச்சு!
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் என கூறப்படுகிறது.
பிறந்தநாளில் பெண்ணுக்கு நடந்த கொடுமை
மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில், 20 வயது இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அறிமுகமான இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது பையனுக்கு புனிதர் பட்டம்
இணைய யுகத்தில் ஆன்மீகப் பணியைச் செய்து, "இறைவனின் இன்ஃப்ளூயன்சர்" (God's Influencer) என்று அழைக்கப்பட்ட இத்தாலிய இளைஞர் கார்லோ அகுடிஸுக்கு (Carlo Acutis) புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. போப் லியோ தலைமையில் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்ற புனிதர் பட்டம் சூட்டும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதன் மூலம், கார்லோ அகுடிஸ் மில்லினியல் தலைமுறையில் இருந்து புனிதர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பேரழிவுத் தாக்குதல்!
ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உக்ரைன் மீது தனது மிக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்கள் இருக்கும் கீவ் நகரம் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
கீவ்வில் உக்ரைன் அமைச்சரவைக் கட்டிடத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, பெரிய புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள் கீவ்வில் உள்ள பல உயரமான கட்டிடங்களை சேதப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பென்னிகுயிக் குடும்பத்தினரைச் சந்தித்த ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
பெண் சிங்கம் பிரேமலதா எம்.எல்.ஏ ஆவார்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன், "2006-ல் எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டமன்றத்திற்குச் சென்றாரோ, அதேபோல் 2026-ல் பெண் சிங்கமாக எனது தாய் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. ஆகி சட்டமன்றத்திற்குச் செல்வார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசிய கோப்பையில் இந்திய அணி பிளேயிங் லெவன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
கேரள கிரிக்கெட் லீக்கில் 380 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித்த போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் தான்.
ஆசியக் கோப்பையில் இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் ( துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அல்லது ஹர்ஷித் ராணா.