MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • புற்றுநோய்க்கு மருந்து வந்தாச்சு! ரஷ்யாவின் புது தடுப்பூசி 100% சக்சஸ்!

புற்றுநோய்க்கு மருந்து வந்தாச்சு! ரஷ்யாவின் புது தடுப்பூசி 100% சக்சஸ்!

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் என கூறப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Sep 07 2025, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரஷ்யா கண்டுபிடித்த கேன்சர் மருந்து
Image Credit : AI / ChatGPT

ரஷ்யா கண்டுபிடித்த கேன்சர் மருந்து

உலக அளவில் லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கும் புற்றுநோய்க்கு எதிரானப் போராட்டத்தில் ரஷ்யா புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாடு கண்டறிந்துள்ள புற்றுநோய் தடுப்பூசி, சோதனைகளில் 100% செயல்திறனைக் காட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
mRNA தொழில்நுட்பத்தில் புதிய தடுப்பூசி
Image Credit : Getty

mRNA தொழில்நுட்பத்தில் புதிய தடுப்பூசி

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, ‘என்ட்ரோமிக்ஸ்’ (Entromix) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது, கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ (mRNA) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி புற்றுநோய்க் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்ததும், இந்தத் தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் சிகிச்சை
Image Credit : Getty

நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும் சிகிச்சை

இந்தத் தடுப்பூசி, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்படக்கூடிய அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போலன்றி, ஆரோக்கியமான திசுக்களைச் சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

44
ஆரம்பகட்ட பயன்பாடு மற்றும் பாதுகாப்பு
Image Credit : Getty

ஆரம்பகட்ட பயன்பாடு மற்றும் பாதுகாப்பு

இந்தத் தடுப்பூசி ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள சில புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சோதனைகளின்போது, கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தடுப்பூசி புற்றுநோய் சிகிச்சை முறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உருசியா
தடுப்பூசி மைத்ரி
புற்றுநோய்
புற்றுநோய் விழிப்புணர்வு
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பழங்கள்
ஆரோக்கியம்
மருத்துவம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image2
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Recommended image3
Ebola: காங்கோவில் எபோலா அவசரநிலை! இந்த வைரஸ் ஏன் இவ்வளவு ஆபத்தானது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved