ரூ.1 லட்சம் தாண்டப்போகும் தங்கத்தின் விலை.. எப்போது வாங்கலாம் தெரியுமா?
உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

செப்டம்பர் தங்க விலை
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ரஷ்யா–உக்ரைன், இஸ்ரேல்–ஹமாஸ் போர்கள் மற்றும் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
தங்க முதலீடு
ஆபரணங்களாக மட்டுமே கருதப்பட்ட தங்கம், இன்று சேமிப்பு மற்றும் முதலீட்டின் முதன்மையான கருவியாக மாறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தங்க விலை 1200% வரை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சாதாரண மக்களும் தங்க விலை உயர்வால் கலங்கியுள்ளனர்.
அமெரிக்க வட்டி
செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் தங்க விலையில் மீண்டும் வரலாறு காணாத உயர்வு பதிவாகியுள்ளது. செப்டம்பர் 6-ஆம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராமத்திற்கு ரூ.10,005-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80,040-க்கும் விற்பனையானது. அதே நாளில் 18 காரட் தங்கம் ஒரு கிராமத்திற்கு ரூ.8,285-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.66,280-க்கும் விலை உயர்ந்தது.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, ரூபாய் பலவீனமடைதல் ஆகியவை இந்த அதிரடி விலை உயர்வுக்கு காரணமாகும். ஜனவரி 1-இல் இருந்த சவரன் விலையிலிருந்து சுமார் ரூ.22,800 உயர்ந்து விட்டது. இதன் அடிப்படையில், வரும் நாட்களில் தங்க சவரன் விலை குறைந்தபட்சம் ரூ.95,000 முதல் ரூ.1 லட்சம் வரை செல்வது உறுதி என நிபுணர்கள் கணிக்கின்றனர்.