இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:32 PM (IST) Nov 26
ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஜெயித்து கொடுத்தது நான் தான். இப்போது டெஸ்ட் தோல்விக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
10:17 PM (IST) Nov 26
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூவில், குடிபோதையில் இருந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கணவன் மனைவியைத் தூக்கிக் கீழே போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
10:09 PM (IST) Nov 26
இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
09:52 PM (IST) Nov 26
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணைகளை ஆன்லைனில் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
09:51 PM (IST) Nov 26
தமிழகத்தில் ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பை நவம்பர் 28ம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
09:02 PM (IST) Nov 26
ஹரியானாவில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் ‘HR88B8888’ என்ற விஐபி நம்பர் பிளேட், இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.17 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணின் அடிப்படை விலை ரூ.50,000 ஆக இருந்தது.
08:04 PM (IST) Nov 26
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
07:40 PM (IST) Nov 26
தவெகவில் செங்கோட்டையனுக்கு புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளர். இருவரும் பேசியது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
07:13 PM (IST) Nov 26
2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை அகமதாபாத் பெற்றுள்ளது. 2010-க்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் மெகா விளையாட்டுப் போட்டியாக இருக்கும். இது 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னோட்டமாக அமையும்.
06:51 PM (IST) Nov 26
30 வயதை கடந்த ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 2 யோகாசனங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
06:39 PM (IST) Nov 26
பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், கூகுளின் 'Nano Banana' என்ற மேம்பட்ட AI கருவியைப் பயன்படுத்தி மிகவும் தத்ரூபமான போலி பான் மற்றும் ஆதார் அட்டைகளை உருவாக்கி, AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த பாதுகாப்பு அச்சங்களை எழுப்பியுள்ளார்.
06:23 PM (IST) Nov 26
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை எதிர்காலத்தில் சிறந்த விளங்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில நல்ல பழக்கவழக்கங்களை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.
06:22 PM (IST) Nov 26
EPS Hits Back at Stalin: ஈரோட்டில் அரசு விழாவில் இபிஎஸ் விவசாயிகளுக்கு துரோகி என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
06:11 PM (IST) Nov 26
AI Pulse மாதவ் ஷெத்தின் AI+ Pulse 4G போன் இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.5,999 மட்டுமே! 50MP கேமரா, 5000mAh பேட்டரி என அசத்தல் வசதிகள். முழு விவரம் உள்ளே.
06:03 PM (IST) Nov 26
CTET 2026 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) 2026 அறிவிப்பு விரைவில்! கல்வித் தகுதி, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் உள்ளே.
05:59 PM (IST) Nov 26
இத்தாலியில், தனது தாய் இறந்ததை மறைத்து, அவர் போல பெண் வேடமிட்டு சுமார் 80 லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தை மகன் ஒருவர் மோசடி செய்துள்ளார். தாயின் உடலை வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்த அவர், அடையாள அட்டை புதுப்பிக்கச் சென்றபோது பிடிபட்டார்.
05:54 PM (IST) Nov 26
TNPSC 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆனுவல் பிளானர் விரைவில் வெளியீடு! குரூப் 4 தேர்வு எப்போது? காலிப்பணியிடங்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ.
05:46 PM (IST) Nov 26
50 வயதிலும் இளமையாக தெரிய கீழே குறிப்பிட்ட உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
05:41 PM (IST) Nov 26
RITES Recruitment RITES நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்! பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.42,478. முழு விவரம் உள்ளே.
05:40 PM (IST) Nov 26
செங்கோட்டையன் மட்டுமின்றி அதிமுகவில் மேலும் பலர் தவெகவில் இணைவார்கள் என்று துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு செங்கோட்டையன் முக்கிய கருவியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
05:29 PM (IST) Nov 26
ஆஸ்திரேலிய மழைக்காட்டில் காணப்படும் Elaeocarpus angustifolius மரம், உண்மையான நீல நிறத்தில் பழத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறம் நிறமிகளால் ஏற்படவில்லை, மாறாக 'கட்டமைப்பு நிறமாற்றம்' என்ற ஒளியியல் விளைவால் ஏற்படுகிறது.
05:29 PM (IST) Nov 26
Realme GT 8 ரியல்மி GT 8 ப்ரோ விற்பனை தொடங்கியது! 7000mAh பேட்டரி, 200MP கேமரா மற்றும் அஸ்டன் மார்ட்டின் எடிஷன். விலை மற்றும் சலுகை விவரங்கள் உள்ளே.
05:18 PM (IST) Nov 26
Meta மெட்டா Oakley ஸ்மார்ட் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! ரூ.41,800 விலையில் 3K வீடியோ, ஹிந்தி AI வசதி மற்றும் பிட்னஸ் டிராக்கிங். விற்பனை டிசம்பர் 1 முதல்.
05:10 PM (IST) Nov 26
YouTube Music யூடியூப் மியூசிக் 2025 ரீகேப் வெளியானது! உங்கள் இசை ரசனையை அறிய புதிய AI சேட் வசதி. மியூசிக்கல் பாஸ்போர்ட் மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளே.
05:05 PM (IST) Nov 26
தமிழக அரசியலில் அனுபவம்வாய்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதனால் செங்கோட்டையன் தவெகவில் விரைவில் இணையப் போவது உறுதியாகியுள்ளது.
05:05 PM (IST) Nov 26
Uber Simple Mode ஊபர் செயலியில் முதியவர்களுக்காக 'Simple Mode' அறிமுகம்! பெரிய எழுத்துக்கள் மற்றும் எளிமையான வசதிகள். இதை ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே.
04:45 PM (IST) Nov 26
எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த பிறகு சென்னை, மவுண்ட் ரோடு பகுதியை செங்கோட்டையினுடைய கார் வட்டம் அடித்தது. இந்நிலையில் அவர் விஜய சந்திப்பாரா? அல்லது அதற்கு முன்னதாக அறிவாலயம் செல்வாரா என்கிற குழப்பம் ஏற்பட்டது.
04:42 PM (IST) Nov 26
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியை அவர் பாராட்டியுள்ளார்.
04:32 PM (IST) Nov 26
மோசடிகளைத் தடுக்க, நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான இறந்தவர்களின் ஆதார் எண்களை ஆதார் ஆணையம் (UIDAI) நீக்கியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் myAadhaar போர்ட்டல் மூலம் இறந்தவர் குறித்த தகவலைத் தெரிவிக்கலாம்.
04:15 PM (IST) Nov 26
செங்கோட்டையனின் லைனுக்கு இரண்டு முறை வந்துள்ளார் மு.க.ஸ்டாலின். அப்போது, உங்களுக்கு என்ன தேவை. உங்களை போன்ற அனுபவமுள்ள சீனியர்கள் திமுகவுக்கு வந்தால் நல்லது. நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் நாங்கள் செய்து தருகிறோம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்
04:08 PM (IST) Nov 26
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஸ்கூல் டாஸ்கின் போது கானா வினோத், அம்பேத்கர் பெயரை சொல்லியபோது அதை மியூட் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.
04:02 PM (IST) Nov 26
ஸ்பாம் அழைப்புகள் மற்றும் மோசடி மெசேஜ்களுக்கு எதிராக டிராய் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் வரவிருக்கும் MNV பிளாட்ஃபாரம் மூலம் மோசடிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:00 PM (IST) Nov 26
ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து வீட்டிலிருந்து ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
03:50 PM (IST) Nov 26
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 தொகை. நவம்பர் 29ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.
03:49 PM (IST) Nov 26
சீனாவின் Agibot A2 என்ற மனித உருவ ரோபோ, மூன்று நாட்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்து புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களுடன், இந்த ரோபோ ஷாங்காய் நகரில் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
03:44 PM (IST) Nov 26
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ் தொடரில் மோசமான தோல்வியை தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை விட கீழாக 5வது இடத்தில் உள்ளது.
03:28 PM (IST) Nov 26
இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி, ஐஆர்சிடிசி இணையதளத்தில் TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) தாக்கல் செய்வதன் மூலம் உங்கள் டிக்கெட் பணத்தை எளிதாகத் திரும்பப் பெற முடியும்.
03:23 PM (IST) Nov 26
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 திரைப்படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள நிலையில், அப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.
03:23 PM (IST) Nov 26
03:04 PM (IST) Nov 26
Tamilnadu Red Alert: குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.