- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பிக் பாஸ் வீட்டில் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த தடையா? மியூட் பண்ணியதால் வில்லங்கத்தில் சிக்கிய விஜய் டிவி
பிக் பாஸ் வீட்டில் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த தடையா? மியூட் பண்ணியதால் வில்லங்கத்தில் சிக்கிய விஜய் டிவி
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் ஸ்கூல் டாஸ்கின் போது கானா வினோத், அம்பேத்கர் பெயரை சொல்லியபோது அதை மியூட் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.

Ambedkar Name Muted in Bigg Boss Tamil
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி தமிழில் இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதன் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியாளர் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து வைல்டு கார்டு என்ட்ரி ஆக நான்கு பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பிக் பாஸ் வீடு ஒரு ஸ்கூலாக மாறி இருக்கிறது. இந்த டாஸ்க்கில் பிரஜன் பிரின்சிபல் ஆகவும், கனி மற்றும் அமித் ஆசிரியர்களாகவும், பார்வதி மற்றும் எஃப் ஜே வார்டன்களாகவும் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகளாகவும் பங்கேற்றுள்ளனர்.
அம்பேத்கர் பெயருக்கு மியூட் போட்ட பிக் பாஸ்
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான கானா வினோத், அம்பேத்கர் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அம்பேத்கர் சொன்ன கருத்தை சுட்டிக்காட்டி கானா வினோத் பேசியதோடு இறுதியாக அம்பேத்கர் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் அம்பேத்கர் பெயரை மட்டும் மியூட் செய்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
பிரஜன் வகுப்பெடுக்கும் போது எழுந்து நின்று பேசிய கானா வினோத், நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ சாவதே மேல் என அம்பேத்கர் கூறியதாக கானா வினோத் கூறிய வீடியோவில் அம்பேத்கர் என்கிற பெயரை மட்டும் விஜய் டிவி மியூட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த தடை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்.
நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்க்கு பயன்படவில்லை எனில் நீ கற்றதில் பயன் இல்லைனு பாபாசாகேப் அம்பேத்கர் சொல்லிருக்காரு 🥹❤️👏#Ganavinoth#GanavinothArmy#BiggBossTamil9#BiggBoss9Tamil
pic.twitter.com/uRiqJZEslO— Ⱨ₳Ⱡ₣₵₳₱😎 (@halfcap148) November 25, 2025

