- Home
- Tamil Nadu News
- புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம்! டீலுக்கு ஓகே சொன்ன செங்கோட்டையன்! விஜய்யுடன் 2 மணி நேரம் பேசியது என்ன?
புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம்! டீலுக்கு ஓகே சொன்ன செங்கோட்டையன்! விஜய்யுடன் 2 மணி நேரம் பேசியது என்ன?
தவெகவில் செங்கோட்டையனுக்கு புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளர். இருவரும் பேசியது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய்யை சந்தித்த செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளது தான் இப்போது தமிழக அரசியலில் பேசும்பொருளாக உள்ளது.
அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்ற முடிவை கையில் எடுத்த செங்கோட்டையன் பின்பு அது சரிப்பட்டு வராது என்று தெரிந்து தவெகவில் ஐக்கியமாக தயாராகி விட்டார். இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர் இன்று மாலை தவெக தலைவர் விஜய்யை சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
2 மணி நேரம் பேச்சுவார்த்தை
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேர சந்திப்புக்கு பிறகு செங்கோட்டையன் காரில் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பொறுப்பு?
செங்கோட்டையனை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். சுமார் 50 ஆண்டு காலம் அரசியலில் அனுபவம்வாய்ந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் பெரிய பதவி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.
இதனை உணர்ந்து கொண்ட விஜய், தவெகவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம் அளிப்பபதாகவும், அமைப்பு செயலாளர் போன்ற பொறுப்பு கொடுப்பதாகவும் செங்கோட்டையனிடம் இன்று உறுதி அளித்துள்ளார்.
விஜய்யிடம் செங்கோட்டையன் சொன்னது என்ன?
மேலும் தனது பிரசார பயணத்தை திட்டமிடும் பொறுப்பு, கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு போன்ற பெரிய பொறுப்புகளை வழங்குவதாக விஜய் செங்கோட்டையனிடம் கூறியுள்ளார். இந்த டீலுக்கு ஓகே செய்த செங்கோட்டையன், தவெகவில் இணைய கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் திமுகவை போல் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒரு பெரிய கூட்டணியை தவெகவுக்கு அமைத்து கொடுப்பதாகவும் விஜய்யிடம் செங்கோட்டையனிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
செங்கோட்டையன் வருகையால் விஜய் புத்துணர்ச்சி
தவெகவில் அனுபவம்வாய்ந்த அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. இதற்கு சாட்சியாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சொல்லலாம். ஆகையால் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்கள் தான் தவெகவுக்கு இப்போது தேவை. ஆகவே செங்கோட்டையன் வருகை தவெகவுக்கு மட்டுமின்றி விஜய்க்குமே ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நாளை 10 மணிக்கு இணைப்பு விழா
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி? கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி நடக்க வேண்டும்? கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் டார்கெட் செய்வது எப்படி? போன்ற விஷயங்களுக்கு செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரின் உதவி பெரிதும் கைகொடுக்கும்.
ஆகவே செங்கோட்டையனை விஜய் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்றுள்ளார். இதனால் தவெக தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் நாளை காலை 10 மணிக்கு இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

