Women’s Health : பெண்களே! 30 வயசு ஆகிட்டா? ஆரோக்கியமா இருக்க ரெண்டே யோகா போதும்
30 வயதை கடந்த ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 2 யோகாசனங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Yoga Poses for Women
இன்றைய காலத்தில் பல பெண்கள் உடல் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதாவது ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் சமநிலையின்மை, பிறப்புறுப்பு தொற்று மற்றும் கருவுறுதல் போன்றவை இதில் அடங்கும். பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, அலுவலக வேலை மற்றும் குடும்பம் போன்றவை இவற்றிற்கு காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 30 வயதை கடந்த ஒவ்வொரு பெண்களும் தங்களது வாழ்க்கையில் தினமும் யோகா செய்வதை ஒரு பகுதியாக ஆக்குங்கள். குறிப்பாக கீழே சொல்லப்பட்டுள்ள ரெண்டு யோகாசனங்களை தினமும் செய்வதன் மூலம் பல பிரச்சனைகள் குறையும். அந்த யோகாசனங்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
பத்ராசனம் :
இந்த ஆசனம் செய்வது ரொம்பவே எளிது. இதற்கு முதலில் தரையில் உட்கார்ந்து கால்களை முடித்து பாதங்களை ஒன்று சேர்த்து முழங்கால்களை தரையில் ஊன்றி முதுகை நேராக வைத்து, இரண்டு கைகளின் விரல்களை கால்களின் விரலில் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நன்மைகள் ;
இரத்த அழுத்தம், இதய நோய்களை தடுக்கும், சுகப்பிரசவத்திற்கு உதவும் மற்றும் கால் தசைகளை வலுப்படுத்தும்.
பர்வதாசனம்
இந்த ஆசனத்தை மிகவும் எளிதாக செய்யலாம். இந்த ஆசனம் V வடிவத்தில் நிற்பது ஆகும். இந்த ஆசனம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நன்மைகள் :
- இடுப்பு மற்றும் மார்பு பகுதியை வலுப்படுத்தும்.
- வயிற்றில் குவிந்திருக்கும் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும்.
- செரிமானத்தை மேம்படுத்தும், நரம்புகளை ஆரோக்கியமாக உதவும்.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
- கை, கால்கள் மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
- நுரையீரலில் கபம் சேராமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பு : உயர் இரத்த அழுத்தம்,, இதய நோய், கடுமையான மூட்டு வலி, முதுகு தண்டுவட காயங்கள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

