AI Pulse மாதவ் ஷெத்தின் AI+ Pulse 4G போன் இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.5,999 மட்டுமே! 50MP கேமரா, 5000mAh பேட்டரி என அசத்தல் வசதிகள். முழு விவரம் உள்ளே.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி (Realme) நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து கலக்கியவர் மாதவ் ஷெத். அவர் தனியாகத் தொடங்கிய 'நெக்ஸ்ட்குவாண்டம் ஷிஃப்ட் டெக்னாலஜிஸ்' (NxtQuantum Shift Technologies) நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய 'ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி' (AI+ Pulse 4G) ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் விற்பனையில் விலைக் குறைப்புடன் கிடைப்பது வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
வெறும் ரூ.5999 தானா? நம்ப முடியலையே!
பிளிப்கார்ட்டில் தற்போது நடைபெற்று வரும் 'பிளாக் ஃப்ரைடே சேல்' (Black Friday Sale) விற்பனையில் இந்த போனுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7,999-க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இப்போது வெறும் ரூ.5,999-க்கு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி பிளாக், ப்ளூ, க்ரீன், பிங்க், பர்பிள் மற்றும் ஸ்பார்க்கிள் ரெட் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைப்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
டிஸ்பிளே மற்றும் ப்ராசஸர் எப்படி?
விலை குறைவு என்பதால் தரத்தில் சமரசம் செய்திருப்பார்களோ என்று நினைக்க வேண்டாம். இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் HD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்காக Unisoc T615 சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான NxtQ OS மூலம் இது இயங்குகிறது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க 'Next Privacy Dashboard' என்ற வசதியும் இதில் உள்ளது.
கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள்
புகைப்பட பிரியர்களுக்காகப் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, மெமரி கார்டு மூலம் 1TB வரை விரிவாக்கிக் கொள்ளும் வசதி உள்ளது.
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
நாள் முழுவதும் சார்ஜ் நிற்க வேண்டும் என்பதற்காக 5,000mAh பேட்டரி மற்றும் அதை வேகமாக சார்ஜ் செய்ய 18W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு USB Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதிகள் உள்ளன.
5ஜி போன் வேண்டுமா? அதுவும் இருக்கு!
4ஜி போன் வேண்டாம், 5ஜி தான் வேண்டும் என்பவர்களுக்காக இதே நிறுவனத்தின் 'ஏஐ பிளஸ் நோவா 5ஜி' (AI+ Nova 5G) மாடலும் விற்பனையில் உள்ளது. 120Hz டிஸ்பிளே, Unisoc T8200 சிப்செட் கொண்ட இந்த 5ஜி போனின் விலை பிளிப்கார்ட்டில் ரூ.8,999 முதல் தொடங்குகிறது.
குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட போனைத் தேடுபவர்களுக்கு இந்த 'ஏஐ பிளஸ்' சீரிஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.


