MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • அரசு வேலை கனவா? TNPSC 2026 ஆனுவல் பிளானர் ரெடி.. குரூப் 4 தேர்வு தேதி எப்போ தெரியுமா?

அரசு வேலை கனவா? TNPSC 2026 ஆனுவல் பிளானர் ரெடி.. குரூப் 4 தேர்வு தேதி எப்போ தெரியுமா?

TNPSC 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆனுவல் பிளானர் விரைவில் வெளியீடு! குரூப் 4 தேர்வு எப்போது? காலிப்பணியிடங்கள் எவ்வளவு? முழு விவரம் இதோ.

2 Min read
Suresh Manthiram
Published : Nov 26 2025, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
TNPSC தனியார் துறையை மிஞ்சும் அரசு வேலை மோகம்!
Image Credit : Asianet News

TNPSC தனியார் துறையை மிஞ்சும் அரசு வேலை மோகம்!

உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் பெருகிவிட்ட போதிலும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே அரசு வேலை மீதான மோகம் எள்ளளவும் குறையவில்லை. குறிப்பாக 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வை எழுதிவிடத் துடிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள் கூட, பணிப் பாதுகாப்பு (Job Security) கருதி அரசுத் தேர்வுகளை நாடி வருவது வழக்கமாகிவிட்டது.

26
லட்சக்கணக்கில் குவியும் விண்ணப்பங்கள் - காரணம் என்ன?
Image Credit : ANI

லட்சக்கணக்கில் குவியும் விண்ணப்பங்கள் - காரணம் என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்காகத் தோராயமாக 15,000 காலியிடங்களை நிரப்பி வருகிறது. சாதி, மத பேதமின்றி திறமை அடிப்படையில் (Merit Based) மட்டுமே பணி வழங்கப்படுவதால், சமூகத்தில் இதுவரை அதிகாரம் கிடைக்கப்பெறாத விளிம்புநிலை மக்களும், முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் போட்டி கடுமையாகி வருகிறது.

Related Articles

Related image1
காலிபணியிடங்களை சகட்டுமேனிக்கு அதிகரிக்கும் TNPSC.! இனி வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரிதான் போங்க.!
Related image2
TNPSC: குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
36
ஐந்தாறு ஆண்டுகள் தவம்! தேர்வர்களின் அவல நிலை
Image Credit : Google

ஐந்தாறு ஆண்டுகள் தவம்! தேர்வர்களின் அவல நிலை

அரசுப் பணிக்கான இந்தத் தீவிரப் போட்டி, சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்காக, இளைஞர்கள் சராசரியாக 5 முதல் 6 ஆண்டுகள் வரை வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழுநேரமாகப் படிக்க வேண்டியுள்ளது. இது தேர்வர்களுக்குக் கடுமையான மன உளைச்சலையும், குடும்பத்திற்குப் பொருளாதாரச் சுமையையும் உருவாக்குகிறது.

46
தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கம்: ஆண்டு செயல்திட்டம் (Annual Planner)
Image Credit : Google

தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கம்: ஆண்டு செயல்திட்டம் (Annual Planner)

தேர்வர்களின் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் படிக்கவும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் 'ஆண்டு செயல்திட்டத்தை' வெளியிடுகிறது. வரவிருக்கும் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வுத் தேதி என்ன போன்ற உத்தேசத் தகவல்களை இது முன்கூட்டியே தெரிவித்துவிடும்.

56
விரைவில் வெளியாகும் 2026 அட்டவணை! எதிர்பார்ப்புகள் என்ன?
Image Credit : our own

விரைவில் வெளியாகும் 2026 அட்டவணை! எதிர்பார்ப்புகள் என்ன?

இந்நிலையில், 2026-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி ஆனுவல் பிளானர் மிக விரைவில் வெளியிடப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2A மற்றும் லட்சக்கணக்கானோர் ஆவலுடன் எதிர்பார்க்கும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும். மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் தேர்வுகளுக்கான (Combined Technical Services) அறிவிப்புகளும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

66
ஹேட்ரிக் அடிக்குமா குரூப் 4? அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள்!
Image Credit : our own

ஹேட்ரிக் அடிக்குமா குரூப் 4? அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள்!

வழக்கமாக சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு வரும் குரூப் 4 தேர்வு அறிவிப்புகள், கடந்த 2018 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அடுத்தடுத்து வெளியானது. இது கடந்த 8 ஆண்டுகளில் நடக்காத அதிசயமாகும். 2025-ல் காலியிடங்கள் குறைவாக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டும் குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு வேலை கனவோடு காத்திருக்கும் தேர்வர்கள், ஆனுவல் பிளானரை எதிர்பார்த்து இப்போதே தங்கள் தயாரிப்பைத் தொடங்குவது புத்திசாலித்தனம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Recommended image2
Job Offer: 8th,12th முடித்தோருக்கு உள்ளூரில் அரசு வேலை.! தினசரி பேட்டாவுடன் கைநிறைய சம்பளம் காத்திருக்கு.!
Recommended image3
Job Alert: மத்திய அரசு வேலை தேடுவோருக்கு ஜாக்பாட்.! நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அணுசக்தி துறையில் பணியாற்ற வாய்ப்பு.!
Related Stories
Recommended image1
காலிபணியிடங்களை சகட்டுமேனிக்கு அதிகரிக்கும் TNPSC.! இனி வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரிதான் போங்க.!
Recommended image2
TNPSC: குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved