- Home
- Career
- TNPSC: குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
TNPSC: குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 2 Exam: குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 தேர்வு வரும் 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 5,53,634 பேர் எழுந்த உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,905 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
பறக்கும் படை
குரூப் 2 தேர்வு மற்றும் பணி நடைமுறை வெளிப்படையாக நடக்கும். யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும். மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
1,905 தேர்வு மையங்கள்
மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 1,905 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பேருந்துகள்
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிகள்
தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது 28.09.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும்.
இடைத்தரர்களிடம் கவனம்
09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வேலைவாங்கித் தருவதாக கூறும் இடைத்தரர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இடைத்தரர்கர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு டிஎன்பிஎஸ்சி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.