"படிக்கிறது மட்டும் போதாது!" - பள்ளிகளுக்கு CBSE போட்ட புது கண்டிஷன் என்ன தெரியுமா?
CBSE 2026 பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, பள்ளிகளில் மனநலன் மற்றும் SEL நடவடிக்கைகளைக் கட்டாயமாக்க CBSE உத்தரவு. புது கண்டிஷன் என்ன தெரியுமா?

CBSE
பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித உதறல் எடுப்பது சகஜம். "சிலபஸ் முடிச்சாச்சா?", "ரிவிஷன் பண்ணியாச்சா?", "மார்க் குறையுமோ?" என்ற பயம் மாணவர்களை மட்டுமல்ல, பெற்றோர்களையும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, 2026-ம் ஆண்டு போர்டு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கலாம். ஆனால், கவலை வேண்டாம்! மாணவர்களின் இந்த 'எக்ஸாம் ஸ்ட்ரெஸ்ஸை' (Exam Stress) குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு சூப்பரான முடிவை எடுத்துள்ளது.
கல்வி என்பது வெறும் புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, ஒரு மாணவனின் முழுமையான வளர்ச்சியும் சார்ந்தது என்பதை உணர்ந்துள்ள CBSE, பள்ளிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், வரவிருக்கும் தேர்வுகளுக்கு முன்பாக மாணவர்களின் மனநலம் (Mental Health) மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கறாராகத் தெரிவித்துள்ளது.
சமூக உணர்வு கற்றல் (SEL) - இனி இதுவும் சிலபஸ் தான்!
CBSE பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் மிக முக்கியமானது 'சமூக உணர்வு கற்றல்' (Social Emotional Learning - SEL). இது என்ன புது பாடம் என்று யோசிக்கிறீர்களா? இது புத்தகம் தாண்டிய ஒரு வாழ்க்கைக்கல்வி. மாணவர்கள் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, சரியான முடிவுகளை எடுப்பது, மற்றும் மன அழுத்தத்தைக் கையாள்வது போன்ற திறன்களை வளர்ப்பதுதான் SEL.
இனி பள்ளிகளில் பாடங்களோடு சேர்த்து, இந்த SEL நடவடிக்கைகளையும் கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டும் என்று CBSE அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு பயமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என வாரியம் நம்புகிறது.
கவுன்சிலிங் மற்றும் பாதுகாப்பான சூழல் கட்டாயம்!
பல நேரங்களில் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு அல்லது பயத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இதற்குத் தீர்வாக, அனைத்துப் பள்ளிகளிலும் முறையான ஆலோசனை சேவைகள் (Counseling Services) மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்க வேண்டும் என்று CBSE வலியுறுத்தியுள்ளது.
கவுன்சிலிங் மற்றும் பாதுகாப்பான சூழல் கட்டாயம்!
மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி, தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசக்கூடிய ஒரு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய (Inclusive) சூழலைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும். "மாணவர்களின் நலனே முதன்மையானது" என்ற அணுகுமுறையைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இது வெறும் தேர்வுக்கான தயாரிப்பு மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் பள்ளிகள் உணர வேண்டும் என்பதே CBSE-யின் நோக்கம்.

