MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Training: தினமும் ரூ.2,000 வருமானம்.! அட்டகாசமான வருமானத்திற்கு அரசு வழங்கும் பயிற்சி.! எப்போ தெரியுமா?

Training: தினமும் ரூ.2,000 வருமானம்.! அட்டகாசமான வருமானத்திற்கு அரசு வழங்கும் பயிற்சி.! எப்போ தெரியுமா?

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து 3 நாள் நேரடிப் பயிற்சி அளிக்கிறது. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று தினமும் ₹2000 வரை சம்பாதிக்கலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 11 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சம்பாதிப்பது ரொம் ஈசி.!
Image Credit : Asianet News

சம்பாதிப்பது ரொம் ஈசி.!

சொந்தமாக தொழில் தொடங்கி கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? மாதம் முழுவதும் உழைத்து வாங்கும் சம்பளத்தை, ஒரு சில நாட்களில் ஈட்ட வழி கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம்! தமிழக அரசின் ஒரு சிறப்பான திட்டம் இப்போது உங்கள் கதவைத் தட்டுகிறது.

26
இயற்கை மீது பெருகும் ஆர்வம் - கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!
Image Credit : Asianet News

இயற்கை மீது பெருகும் ஆர்வம் - கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!

இன்று மக்கள் மத்தியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கை மற்றும் மூலிகைப் பொருட்களை (Herbal Products) தேடித்தேடி வாங்குகிறார்கள். இந்தத் தேவையை ஒரு தொழிலாக மாற்றினால், தினமும் 2,000 ரூபாய் முதல் அதற்கும் மேல் தாராளமாக லாபம் ஈட்ட முடியும்.

Related Articles

Related image1
குறைந்த முதலீடு.! மாதம் ரூ.3 லட்சம் வருமானம்.! கோடைக்கு ஏற்ற ஏர் கூலர் பிஸினஸ் ஐடியா.!
Related image2
Training: மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க இதோ ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா.! வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு தரும் அட்டகாசமான பயிற்சி.!
36
தமிழக அரசின் அசத்தல் பயிற்சி!
Image Credit : Asianet News

தமிழக அரசின் அசத்தல் பயிற்சி!

மக்களின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), கரூரில் நேரடிப் பயிற்சியை வழங்குகிறது.

  • பயிற்சி எது பற்றி?: மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு.
  • எப்போது?: மார்ச் 12 முதல் 14 வரை (3 நாட்கள்).
  • நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
  • பயிற்சி கட்டணம்: வெறும் ₹5,000 மட்டுமே.
46
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
Image Credit : Asianet News

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள அடிதட்டு மக்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். தரம் வாய்ந்த சோப்பு, கூந்தல் தைலம், பொடிகள் ஆகியவற்றைத் தயாரிப்பது மட்டுமின்றி, அதை எப்படிச் சந்தைப்படுத்துவது என்பதையும் அரசு அதிகாரிகள் உங்களுக்குக் கற்றுத் தருவார்கள்.

56
மக்களே உடனே முந்துங்கள்!
Image Credit : Asianet News

மக்களே உடனே முந்துங்கள்!

இந்த 3 நாள் பயிற்சி உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு தொடக்கமாக அமையலாம். கரூரில் நடக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

9994322859 / 9080609809

தமிழக அரசின் MSME துறையின் இந்த வழிகாட்டுதலுடன், குறைந்த முதலீட்டில் உங்கள் தொழிலைத் தொடங்கி நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலாளியாக மாறுங்கள்!

66
நிர்வாக ரீதியான விசாரணைகளுக்கு!
Image Credit : Asianet News

நிர்வாக ரீதியான விசாரணைகளுக்கு!

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII-TN) சென்னை தலைமை அலுவலக முகவரி இதோ!

தலைமை அலுவலக முகவரி

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.

நீங்கள் கரூரில் நடைபெறும் பயிற்சி அல்லது பிற மாவட்ட அளவிலான செயல்பாடுகள் குறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்பினால், அந்தந்த மாவட்டத் திட்ட மேலாளர்களை அல்லது இந்த சென்னை அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பயிற்சிகள்
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
முதலீடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ஆம் வகுப்பு தமிழ்: அதிக மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் குறிப்புகள்
Recommended image2
NEET UG 2026: தேர்வு நேரத்தில் பாடங்கள் மறக்கிறதா? இந்த 'FBI' மற்றும் 'OHIO' பார்முலாவை ட்ரை பண்ணுங்க!
Recommended image3
JEE Advanced 2026: தேர்வு தேதி வந்தாச்சு! நீங்க ஐஐடி-யில் சேரத் தயாரா? இதோ விண்ணப்பிக்கும் முறை!
Related Stories
Recommended image1
குறைந்த முதலீடு.! மாதம் ரூ.3 லட்சம் வருமானம்.! கோடைக்கு ஏற்ற ஏர் கூலர் பிஸினஸ் ஐடியா.!
Recommended image2
Training: மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க இதோ ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா.! வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு தரும் அட்டகாசமான பயிற்சி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved