MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குறைந்த முதலீடு.! மாதம் ரூ.3 லட்சம் வருமானம்.! கோடைக்கு ஏற்ற ஏர் கூலர் பிஸினஸ் ஐடியா.!

குறைந்த முதலீடு.! மாதம் ரூ.3 லட்சம் வருமானம்.! கோடைக்கு ஏற்ற ஏர் கூலர் பிஸினஸ் ஐடியா.!

Air Cooler Business Plan Tamil : கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குறைந்த முதலீட்டில் ஏர் கூலர் வியாபாரம் செய்து மூன்று மாதங்களில் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Mar 05 2026, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஏர் கூலர் தயாரிப்பு மற்றும் விற்பனை
Image Credit : Gemini AI

ஏர் கூலர் தயாரிப்பு மற்றும் விற்பனை

மார்ச் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரங்களில் மக்கள் அதிகமாக ஏர் கூலர்களை வாங்கத் தொடங்குவார்கள். ஏப்ரல், மே மாதங்களில் ஏர் கூலர்களின் தேவை அதிகரித்து விடும். நடுத்தர மற்றும் ஏழ்மை நிலை குடும்பங்களுக்கு ஏசியை விட ஏர் கூலர் ஒரு சிக்கனமான மற்றும் சிறந்த தேர்வாக இருக்கிறது. 

குறைந்த விலை ஏர் கூலர்களுக்கு சந்தையில் நல்ல தேவை இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஏர் கூலர்களை தயாரித்தாலும் சிறிய பிராண்டுகளுக்கும் சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. இதன் காரணம் விலை தான். பெரிய கூலர்களை விட சிறிய ஏர் கூலர்கள் விலை குறைவு என்பதால் பலரும் இந்த வகை கூலர்களை விரும்பி வாங்குகின்றனர்.

26
முதலீடு மற்றும் திட்டமிடல்
Image Credit : Gemini AI

முதலீடு மற்றும் திட்டமிடல்

ஏர் கூலர் தொழிலை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம். ஏர்கூலர் தயாரிப்பு மற்றும் விற்பனை அல்லது மொத்த விற்பனையாளிடமிருந்து வாங்கி சில்லறை விற்பனை செய்தல். சிறிய அளவிலான சில்லறை விற்பனைக்கு தோராயமாக ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை தேவைப்படும். ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து 15 முதல் 20 ஏர் கூலர்களை வாங்கி விற்பனை செய்வதாகும். 

நடுத்தர அளவிலான தயாரிப்பு என்பது உதிரி பாகங்களை வாங்கி நீங்களே அசெம்பிள் செய்து விற்பது. இதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் தேவைப்படலாம். பெரிய அளவிலான விநியோகம் என்பது நிறுவனங்களிடம் டீலர்ஷிப் படுத்து மாவட்டம் முழுவதும் சப்ளை செய்வது இதற்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் செலவாகக்கூடும்.

Related Articles

Related image1
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
Related image2
ரூ.1000 இருந்தா போதும்.. கையில் லட்ச ரூபாய் கிடைக்கும்.. அசத்தும் எஸ்பிஐ FD திட்டம்.!
36
லாப விகிதம்
Image Credit : Gemini AI

லாப விகிதம்

சில்லறை விற்பனைக்கு 150 முதல் 300 சதுர அடி கொண்ட கடை போதுமானது. தயாரிப்பு பணியில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் உதிரி பாகங்களை வைக்கவும் அசெம்பிள் செய்யவும் 500 முதல் 1000 சதுர அடி கொண்ட குடோன் அல்லது கடை தேவைப்படலாம் .ஏர் கூலர் தொழிலில் லாபம் என்பது சீசனைப் பொறுத்து அதிகமாக இருக்கும். 

நீங்கள் சொந்தமாக அசெம்பிள் செய்யும் பொழுது கூலருக்கு 20% முதல் 35% வரை லாபம் கிடைக்கும். உதாரணமாக ரூ.4,000 அடக்க விலையில் ஒரு கூலரை தயாரித்தால் அதை ரூ.6,000 வரை விற்பனை செய்யலாம். பிராண்டட் கூலர்களை விற்பனை செய்தால் ஒரு பீசிற்கு 15% வரை கமிஷன் கிடைக்கும். பம்புகள், பேன்கள், கூலிங் பேட்களை (Cooling Pads) தனியாக விற்பதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.

46
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Image Credit : Gemini AI

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நீங்கள் அசெம்பிள் செய்ய திட்டமிட்டால் பின்வரும் பாகங்கள் தேவைப்படலாம். பிளாஸ்டிக் பெட்டிகள், வெவ்வேறு வேகத்திறன் கொண்ட மோட்டார்கள், தேன்கூடு வடிவம் அல்லது வைக்கோல் போன்ற கூலிங் பேட்கள், தண்ணீரை சுழற்சி செய்ய உதவும் சிறிய பம்புகள், வேகம் மற்றும் நீரின் அளவை கட்டுப்படுத்த கண்ட்ரோல் சுவிட்சுகள். 

இது நான்கு முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே தீவிரமாக நடைபெறும் தொழிலாகும். சந்தையில் பல உள்ளூர் தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். உங்கள் தயாரிப்புக்கு சர்வீஸ் வாரண்டி வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறலாம். மேலும் பம்புகள் குறைந்த மின்சாரத்தில் அதிக குளிர்ச்சியைத் தரும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும்.

56
அரசு உரிமம் மற்றும் பதிவு
Image Credit : Gemini AI

அரசு உரிமம் மற்றும் பதிவு

வரி செலுத்துவதற்கும் பிற மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கும் ஜிஎஸ்டி பதிவு அவசியமாகும். சிறு தொழில் கடன் பெறுவதற்கு MSME பதிவு உதவும். ட்ரேடு லைசென்ஸ் உள்ளூர் நகராட்சி அல்லது ஊராட்சியிடம் அனுமதி பெறுவதற்கு உதவும். 

கோடை காலம் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நீங்கள் பொருட்களை கொள்முதல் செய்யத் தொடங்கி விட வேண்டும். சீசன் உச்சத்தில் இருக்கும் பொழுது பொருட்களின் விலையும் உயரும். எனவே லாபம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் அல்லது டீலர்ஷிப் எடுப்பதற்கு சரியான நபரை அணுக வேண்டும்.

66
மாதம் ரூ.3 லட்சம் வருமானம்
Image Credit : Getty

மாதம் ரூ.3 லட்சம் வருமானம்

நீங்கள் திட்டமிட்டு சரியான வகையில் இந்த தொழிலை தொடங்கினால் தினமும் பல கூலர்களை விற்பனை செய்யலாம். மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். குறைந்தது மூன்று மாதங்களில் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். இது ஒரு தொழில் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட தகவல்கள் மட்டுமே. தொழில் தொடங்குவதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
உஷார்!.. யுபிஐ பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. பணம் அனுப்பும் முறையில் பெரிய மாற்றம்
Recommended image2
ரூ.1000 இருந்தா போதும்.. கையில் லட்ச ரூபாய் கிடைக்கும்.. அசத்தும் எஸ்பிஐ FD திட்டம்.!
Recommended image3
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
Related Stories
Recommended image1
உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
Recommended image2
ரூ.1000 இருந்தா போதும்.. கையில் லட்ச ரூபாய் கிடைக்கும்.. அசத்தும் எஸ்பிஐ FD திட்டம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved