Kitchen Tips : அட! ஆரஞ்சு தோல் போதும்! ஈ, கொசுத் தொல்லையை ஒழிக்க சூப்பர் டிப்ஸ்!
ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து வீட்டிலிருந்து ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்கலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Bug Spray With Orange Peels
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சித்தொல்லை இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு கடைகளில் விதவிதமான இரசாயன கலந்த ஸ்பிரேக்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், இனி அதை பயன்படுத்தாமல் குப்பையில் வீசும் ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து அவற்றை விரட்டியடிக்கலாம். ஆமாங்க, ஆரஞ்சு பழத்துடன் சில பொருட்களை சேர்த்து ஹோம்மேட் நேச்சுரல் ஸ்ப்ரே தயாரிக்கல. அதை பயன்படுத்தி வீட்டிலிருந்து பூச்சிகளை விரட்டி எடுக்கலாம். அது எப்படியென்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழ தோல் - 2-3
இலவங்கப்பட்டை - 4 துண்டு
புதினா இலை - 10
கற்பூரவள்ளி இலை - 4
கற்பூரம் - 3 துண்டு
வினிகர் - தேவையான அனைத்து
தயாரிக்கும் முறை :
இதற்கு முதலில் ஆரஞ்சு பலத்தை ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் இலவங்கப்பட்டை, புதினா இலைகள், கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை போடவும். பிறகு அவை அனைத்தும் மூழ்கும் வரை வினிகர் ஊற்றவும். இறுதியாக கற்பூரத்தை பொடியாக்கி அதில் சேர்த்து க் கொள்ளுங்கள். இரண்டு நாட்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வடிகட்டி கொள்ளவும். அவ்வளவுதான் பூச்சிகள் சூப்பரான ஹோம்மேட் ஸ்பிரே தயார்.
பயன்படுத்தும் முறை :
தயாரித்து வைத்த ஸ்பிரேவை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஈக்கள், எறும்புகள், சின்ன சின்ன பூச்சிகள், கரப்பான் பூச்சி, பல்லி, கொசுக்கள் வரும் இடங்களில் ஸ்பிரே செய்யவும். இப்படி செய்தால் இனி உங்கள் வீட்டு பக்கம் எந்தவொரு பூச்சிகள், வண்டுகளும் வரவே வராது.
நினைவில் கொள் :
இலவங்கப்பட்டை, கற்பூரம் ஆகியவற்றை தவிர பிற எல்லா பொருட்களையும் பிரஷ்ஷாக தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை தரும். பிரஷ்ஷாக பயன்படுத்த முடியாவிட்டால் நன்கு உலர்த்தி பயன்படுத்தலாம். ஆனால், இப்படி பயன்படுத்தினால் கூடுதலாக வினிகர் சேர்க்கவும் மற்றும் கூடுதலாக ஊற வைக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

