இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:59 AM (IST) Jan 23
இதுவரை மாப்பிள்ளை சபரீசன் வெளியில் தெரியாமல் இயங்கிவந்தார். கடந்த இந்தத் தேர்தலில் எல்லாவற்றுக்கும் சூத்ரதாரி சபரீசன்தான் என திமுக குடும்பம் நம்புகிறது.
09:41 AM (IST) Jan 23
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகரும், டிடிவி.தினகரனின் தளபதியுமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்த முடிவை எதிர்த்ததால் நீக்கப்பட்டுள்ளார்.
09:12 AM (IST) Jan 23
கோமதி தனது குடும்பத்தை ஒன்று சேர்க்க பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், இந்த இணைப்பை விரும்பாத சக்திவேல், விருந்தில் குழப்பம் விளைவிக்க திட்டம் தீட்டுகிறார். இந்த குடும்ப விருந்து என்னவாகப் போகிறது என்பதே கதையின் முக்கிய திருப்பம்.
08:41 AM (IST) Jan 23
பஜாஜ் ஆட்டோ புதிய சேடக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.91,399 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாலிக் பாடி, 113 கி.மீ ரேஞ்ச், மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.
08:40 AM (IST) Jan 23
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ஹாட்ஸ்பாட் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:36 AM (IST) Jan 23
தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வரே சட்டப்பேரவையில் பொய் சொல்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
08:32 AM (IST) Jan 23
தமிழகத்தில் மார்ச் 2026ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.