Thirucherai Saranatha Perumal Temple 5 Wives : பொதுவாகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் மட்டும் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி ஆகிய ஐந்து தேவியர்களுடன் பெருமாள் காட்சி தருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு சாரநாத பெருமாள் கோயில்.இது 108 திவ்ய தேசங்களில் 15-வது திருத்தலமாகும். மூலவர் சாரநாதப் பெருமாள் உடனுறையாக சாரநாயகி தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என 5 மனைவிகளுடன் அருள்பாலிக்கின்றனர். காவிரித் தாய்க்கு பிரத்யக்ஷமாக காட்சியளித்த தலம் இது. இந்த கோயிலின் மண் மிகவும் சத்து வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆள்தான் இந்த கோயிலின் மூலவருக்கு சாரநாத சுவாமி என்று பெயர் வந்ததாம்.

தல வரலாறு: 

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடன் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறப்படுகிறது ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம் அனைவரும் கண்ணகியே உயர்ந்தவள் அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள் அத்தகைய பெருமை எனக்கு வேண்டும் என கேட்டு தல சார புஷ்கரணியில் மேற்கு கரை அரசமரத்தடியில் தவம் இருந்தால் இவ்வளவு தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரி தாயின் மடியில் தவழ்ந்தார் தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன் கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து மனைவியும் அதாவது லஷ்மிகளுடன் காட்சி கொடுத்து வேண்டும் வரம் கேள் என்றார் அதற்கு காவிரி தாங்கள் எப்போதும் இதே காலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றால் பெரும்பாலும் அப்படியே செய்தார் மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம் இதுவே இந்த கோயிலின் வரலாறு என்று கூறப்படுகிறது.

எங்கும் காணக் கிடைக்காத ஒரு அதிசயம்: 

இந்த கோயிலில் மட்டும் தான் எங்கும் காணாத ஒரு அதிசயம் இங்கு உள்ளது பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தளத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மகாலட்சுமி சாரநாயகி நீலதேவி என்ற ஐந்து தேவியாருடன் அதாவது 5 மனைவிகளுடன் அருள் பாலிக்கிறார்.

கோவிலின் அமைப்பு: 

இத்தால பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோளத்தில் காட்சி தருகிறார் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார் விமானம் என்று அழைக்கப்படுகிறது காவிரித்தாய் தலை இறைவனின் தரிசனம் கண்டுள்ளார் . கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரம்மாண்டமான ராஜகோபுரம் உள்ளது கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்காரணையில் மேற்கு கரையில் அகத்தியர்,பிரம்மா, காவிரி ஆகியோர் தனித்தனி சந்ததியில் அருள்பாலிக்கின்றனர் கோயில் உள் பிரகாரத்தில் சீனிவாச பெருமாள், ஆழ்வார்கள் நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார் ,இராமர் அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்திய பாமா, ருக்மணி நரசிம்மமூர்த்தி, பாலாசாரநாதர், சன்னதிகள் உள்ளன

பலன்கள்: 

நாம் செய்த பாவங்களில் இருந்து விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த பெருமாளை வழிபாடு செய்தால் நூறு முறை காவிரியில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு இங்கு வந்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியமும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கிடைக்கும்.