- Home
- Astrology
- Jan 24 Makara Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்கும் அற்புதமான நாள்.!
Jan 24 Makara Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று நடப்பது அனைத்தும் நல்லதாக நடக்கும் அற்புதமான நாள்.!
Jan 24 Makara Rasi Palan : ஜனவரி 24, 2026 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
இன்றைய தினம் உங்களுக்கு சீரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். உங்கள் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
நிதி நிலைமை:
இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். சேமிப்பு நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளது. உடன் பணியாற்றுபவர்களுடன் நல்லுறவு ஏற்படும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்றைய நாள் உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்களின் இல்ல விருந்துகளில் கலந்துகொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளை பொறுத்தவரை இன்று இனிமையான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே உறவு பலப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் நரசிம்மரை வழிபடுவது நல்லது. நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது நல்லது. மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு உணவு தானம் அல்லது அன்னதானம் செய்வது சிறப்பு.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

