- Home
- Astrology
- மீன ராசியை விட்டு விலகும் சனி பகவான்.! 3 ராசிகள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரப்போகுது.!
மீன ராசியை விட்டு விலகும் சனி பகவான்.! 3 ராசிகள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரப்போகுது.!
Sani Peyarchi: 2027 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த சனி பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் சனி பகவான்
ஜோதிடத்தில், சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக அறியப்படுகிறார். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். தற்போது மீன ராசியில் பயணித்து வரும் அவர், 2027ல் மீன ராசியை விட்டு வெளியேறி்மேஷ ராசிக்குள் நுழைவார். இந்த ராசி மாற்றத்தால், ஏழரைச் சனியின் தாக்கம் முற்றிலும் மாறும். இந்த காலகட்டத்தில், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். மேலும் இரண்டு ராசிகளுக்கும் அசுப பலன்கள் குறையும். அந்த ராசிகள் குறித்து பார்ப்போம்.
சிம்மம்
2027 ஆம் ஆண்டில் சனி மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் சனியின் அசுப பலன்களில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள். இதனால், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரம் செய்யும் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். 2027 முதல் சிம்ம ராசியினருக்கு செல்வச் செழிப்பு உண்டாகும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். எதிர்பாராத நல்ல செய்திகளைக் கேட்பார்கள்.
தனுசு
2027ல் சனியின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல வசதிகளைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் சனியின் அசுப தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். தங்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். பழைய முதலீடுகளில் இருந்து திடீர் லாபம் கிடைக்கும். நின்று போன தொழில் மீண்டும் தொடங்கும் வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான தடைகள் நீங்கும். சனியின் அருளால் வாழ்வில் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.
கும்பம்
சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழைவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே, 2027 ஆம் ஆண்டு கும்ப ராசியினருக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவானின் அருளால் வருமானம் பெருகும். ஏழரைச் சனியால் இத்தனை வருடங்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். மன அழுத்தம், தடைகள் மற்றும் சண்டைகளில் இருந்து விடுபட அதிக வாய்ப்புள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

