- Home
- Astrology
- Jan 23 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும்.! தொழிலில் லாபம் கிடைக்கும்.!
Jan 23 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும்.! தொழிலில் லாபம் கிடைக்கும்.!
January 23, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 23, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
ராசிநாதன் புதன் பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சந்திரன் சப்தம ஸ்தானத்தில் பயணிக்கிறார். ராகு கேது ஏழாம் வீட்டில் இருக்கின்றனர். செவ்வாய் மற்றும் சனி பகவான் ராசிக்கு அனுகூலமான இடங்களில் இருக்கின்றனர்.
பொதுவான பலன்கள்:
இன்று அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பொறுமையும் நிதானத்துடன் இருக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். மதியத்திற்கு மேல் சூழல் சாதகமாக மாறும்.
நிதி நிலைமை:
இன்று பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், அதற்கு ஏற்ற வகையில் செலவுகளும் இருக்கும். எனவே ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது அவசியம். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். பங்குச் சந்தை அல்லது பெரிய முதலீடுகளில் இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பேசும்பொழுது வார்த்தைகளை நிதானம் தேவை. கால் வலி அல்லது செரிமானம் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும்.
பரிகாரம்:
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது. மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்வது அல்லது அருகில் உள்ள அம்மன் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

