Thaipusam Festival 2026 Flag Hoisting : தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் முருகனுக்கு தற்போது பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் என்றே கூறலாம்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களிலும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்படும் வைபவம் நடைபெற்று வருகிறது. இன்று பல கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்த நாட்களில் கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. அதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

View post on Instagram

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களிலும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்படும் வைபவம் நடைபெற்று வருகிறது. இன்று பல கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்த நாட்களில் கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. அதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 3 நாட்களுக்கு இலவச தரிசனம் மட்டும் - கட்டணத் தரிசனம் ரத்து!

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் முருகனுக்கு தற்போது பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் என்றே கூறலாம். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் ஆடி கிருத்திகை சஷ்டி விரதம் பக்தர்களால் தற்போது மிகுந்த உணர்வுடன் கடைப்பிடித்து வருகின்றன வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் வருகின்றது. மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில்தான் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

அன்று முருகன் கோயிலில் மிகச் சிறப்பாக இருக்கும். தைபூசத் திருவிழா முருகனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. அறுபடை கோயிலிலும், மற்ற முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஒவ்வொரு கோயில் வாரியாக 10 நாட்களோ அல்லது 12 நாட்களோ இந்த தைப் பூச திருவிழா கொண்டாடப்படும்.

புதன் தோஷத்தால் தடையா? கல்வி மற்றும் வியாபாரத்தில் ஜொலிக்க திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் வழிபாடு!

இந்த தைப்பூச திருவிழா முன்னிட்டு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியானது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 6ஆவது படை வீடான சோலைமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லை நெல்லையப்பன் கோயில், திருச்சி சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் என்று பல கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதே போன்று இனி வரும் 24, 25 மற்றும் 26ஆம் தேதிகளிலும் கொடியேற்றம் நடைபெறுகிறது. முருகனின் 3ஆவது படை வீடான பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.

ரத சப்தமி என்றால் என்ன? இந்த நாள் ஏன் இவ்வளவு விசேஷமாகப் போற்றப்படுகிறது? முழு விளக்கம்!

View post on Instagram

View post on Instagram