- Home
- Tamil Nadu News
- ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு தயார்.. திமுக தூக்கி எறியப்படும்.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. பிரதமர் மோடி சூளுரை!
ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு தயார்.. திமுக தூக்கி எறியப்படும்.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. பிரதமர் மோடி சூளுரை!
பிரதமர் மோடி பாரத் மாதே கி ஜே என தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என தமிழில் கூறினார். தனது பேச்சில் திமுக அரசை சரமாரியாக விளாசித் தள்ளினார்.
12

Image Credit : Asianet News
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். இதன் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி பாரத் மாதே கி ஜே என தனது உரையை தொடங்கினார்.
22
Image Credit : x
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்
தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என தமிழில் கூறினார். இதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, ''இங்கு அலைகடல் என கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது ஒரு செய்தி சொல்கிறது. அது என்னவென்றால் தமிழ்நாடு ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு துடிக்கிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுண்ட்டன் தொடங்கி விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
Latest Videos

