- Home
- Tamil Nadu News
- அண்ணன் எடப்பாடியை முழு மனதோடு ஏற்கிறேன்.. இபிஎஸ்-ஐ பாராட்டித் தள்ளிய டிடிவி தினகரன்.. ஆர்ப்பரித்த தொண்டர்கள்!
அண்ணன் எடப்பாடியை முழு மனதோடு ஏற்கிறேன்.. இபிஎஸ்-ஐ பாராட்டித் தள்ளிய டிடிவி தினகரன்.. ஆர்ப்பரித்த தொண்டர்கள்!
அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று வந்திருக்கிறோம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். பங்காளிகள் நாங்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி முன்பு பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ''எனக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும் பிரச்சனை இருந்தது உண்மை தான். ஆனால் தமிழக மக்களின் நலனுக்காக, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எங்களுக்குரிய பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.
பங்காளிகள் நாங்கள்
அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று வந்திருக்கிறோம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். பங்காளிகள் நாங்கள். தமிழகம் கொலை நாடாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி பெயரை டிடிவி தினகரன் சொன்னபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

