- Home
- Politics
- தமிழக அரசியலை ராஜதந்திரத்தில் திருப்பிய மோடி-இபிஎஸ்.. என்.டி.ஏ மேடையில் எதிர்பாரா ட்விஸ்ட்..!
தமிழக அரசியலை ராஜதந்திரத்தில் திருப்பிய மோடி-இபிஎஸ்.. என்.டி.ஏ மேடையில் எதிர்பாரா ட்விஸ்ட்..!
திருமாறன் ஜி, என்.ஆர்.தனபாலன் போன்றோர் மேடை ஏற உள்ளனர். மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் முக்குலத்தோரிடம் அதிக செல்வாக்கு உள்ள நபராக கருதப்படும் டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்துள்ளார்.

மோடி மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்
இன்று பிற்பகலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் அனைவரும் ஒரு சேர மேடை ஏற இருக்கிறார்கள். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபால், விவசாய சங்க பிரதிநிதி குழு செல்லமுத்து ஆகியோரும் மேடை ஏற இருக்கிறார்கள்.
என்.டி.ஏ வலுவான கூட்டணியா?
3000க்கும் மேற்பட்ட 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு என ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது. சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வரவுள்ளார். இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மோடி வருகைக்கு முன்னரே பொதுக்கூட்டம் தொடங்கி ஒவ்வொருவராக சிறப்புரையாற்று உள்ளனர். மோடி வந்த பிறகு முக்கியமானவர்களான எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி.தினகரன் என முக்கிய நிர்வாகிகள் பேச உள்ளனர். என்.டி.ஏ கூட்டணி தமிழகத்தில் எவ்வளவு வலுவாக இருக்கிறது?
இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணி. திமுகவை வீழ்த்தக்கூடிய கூட்டணி என கூட்டணி. எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை மக்களுடைய உணர்த்தக்கூடிய வகையில் இந்த கூட்டமும் அவர்களது பேச்சும் அமைய இருக்கிறது. அதுமட்டுமின்றி திமுகவின் ஊழல், வாரிசு அரசியல் போன்ற பாஜக, அதிமுக வழக்கமாக பேசும் விஷயங்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களை ஒரு சேர பேச இருக்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது இப்போது என்.டி.ஏ வலுவான கூட்டணியா? என்ற கேள்விகள் எழுகிறது. ஏனென்றால், அப்போது இடம்பெற்ற பெரும்பான்மையான கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. அமமுக இப்போது கூடுதலாக இணைந்துள்ளது.
வலுவாகும் என்.டி.ஏ கூட்டணி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூக மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போனது. சமீபத்தில் சுற்றுப்பயணம் சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது அந்த பகுதியில் உள்ள முக்கியமான இயக்கங்களை சேர்ந்த பலரையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார். அதில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் திருமாறன் ஜி, என்.ஆர்.தனபாலன் போன்றோர் மேடை ஏற உள்ளனர். மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் முக்குலத்தோரிடம் அதிக செல்வாக்கு உள்ள நபராக கருதப்படும் டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு பதிலடி
திமுக நாங்கள்தான் வலுவாக இருக்கிறோம். அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி. இந்த கூட்டணி உடைந்து விடும். தேர்தல் நேரத்தில் சிதறிப் போய் விடும் என்று திமுக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி கட்சிகள் இணையும். ஆனால் 10 மாதத்திற்கு முன்பு பாஜக- அதிமுக கூட்டணி இணைந்தது. இப்போது இந்த கூட்டணி ஒரு இறுதி வடிவம் பெற்றுவிட்டது. இருப்பினும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது ஒரு புறம் இருந்தாலும், கடந்த 20021 சட்டமன்ற தேர்தலைவிட, இப்போது வலுவான கூட்டணியாக என்.டி.ஏ கூட்டணி அமைந்துள்ளது.
