MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பஞ்சாயத்து ஓவர்.. திமுக - காங்கிரஸ் டீல் முடிந்தது.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை இடங்களா?

பஞ்சாயத்து ஓவர்.. திமுக - காங்கிரஸ் டீல் முடிந்தது.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இத்தனை இடங்களா?

திமுக, காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு இன்று கையெழுத்துதாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் கொடுத்துள்ளது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
| Updated : Mar 04 2026, 08:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு கையெழுத்து
Image Credit : x

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு கையெழுத்து

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு இன்று (மார்ச் 4) ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதாவது கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளையும், 1 ராஜ்யசபா சீட்டையும் திமுக ஒதுக்கியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 3 சீட்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

23
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
Image Credit : x

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Articles

Related image1
ட்டுவிஸ்ட்.! புடை சூழ தவெகவில் ஐக்கியமாகும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ் தலைமையில் தோழமைகளை அழைத்து செல்லும் திருமா?!
Related image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
33
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
Image Credit : x

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

பின்னர் இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த அறிக்கையில், ''நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் இன்று (04-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதெனவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் செய்யப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தொழில் அதிபர் 'இதயம்' வி.ஆர்.முத்து காலமானார்.. சோகத்தில் மூழ்கிய விருதுநகர்!
Recommended image2
Now Playing
அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
Recommended image3
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை செய்தால் மட்டுமே PM கிசான் ரூ.6,000.. ஆட்சியர் அதிரடி
Related Stories
Recommended image1
ட்டுவிஸ்ட்.! புடை சூழ தவெகவில் ஐக்கியமாகும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ் தலைமையில் தோழமைகளை அழைத்து செல்லும் திருமா?!
Recommended image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved