MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ட்டுவிஸ்ட்.! புடை சூழ தவெகவில் ஐக்கியமாகும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ் தலைமையில் தோழமைகளை அழைத்து செல்லும் திருமா?!

ட்டுவிஸ்ட்.! புடை சூழ தவெகவில் ஐக்கியமாகும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ் தலைமையில் தோழமைகளை அழைத்து செல்லும் திருமா?!

2026 தேர்தல் களம் சூடுபிடிக்க, திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் அதிகாரப் பங்கீட்டை நோக்கி நகர, தவெக தலைவர் விஜய்யுடன் இணையத் துடிப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 27 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
களம் மாறும் தமிழக அரசியல்.!
Image Credit : x

களம் மாறும் தமிழக அரசியல்.!

தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு இடையே, ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் நடிகர் விஜய் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இதுவரை திமுக கூட்டணியில் அசைக்க முடியாத தூண்களாக இருந்த கட்சிகள், தற்போது தவெக பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காங்கிரஸின் 'பவர் ஷேரிங்' பிடிவாதம்: அதிருப்தியில் கூட்டணி?
Image Credit : x

காங்கிரஸின் 'பவர் ஷேரிங்' பிடிவாதம்: அதிருப்தியில் கூட்டணி?

திமுக கூட்டணியில் நீண்டகாலமாக நீடித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்குப் பிடிகொடுக்காத நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சில முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. "திமுகவில் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை; தவெகவுடன் இணைந்தால் 70 தொகுதிகள் வரை வென்று ஆட்சியில் மாற்றம் காணலாம்" எனச் சில காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளது கூட்டணிக்குள் விரிசலை உண்டாக்கியுள்ளது.

35
திருமா எடுக்கும் அதிரடி முடிவு: தவெகவை நோக்கிப் பாயும் சிறுத்தைகள்?
Image Credit : Asianet News

திருமா எடுக்கும் அதிரடி முடிவு: தவெகவை நோக்கிப் பாயும் சிறுத்தைகள்?

இந்த அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுவது விசிக தலைவர் திருமாவளவன் நிலைப்பாடுதான். சனாதன எதிர்ப்பு மற்றும் சமூக நீதி அரசியலில் சமரசம் செய்யாத திருமா, தவெகவின் கொள்கை பிரகடனத்தில் உள்ள சில அம்சங்கள் தங்களுக்கு இணக்கமாக இருப்பதாகக் கருதுகிறார். காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய அணி உருவாகும்பட்சத்தில், திருமாவளவன் அந்த அணியின் முக்கிய மாஸ்டர் மைண்டாக இருந்து, தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. இது நடந்தால், அது திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பெரும் சரிவை ஏற்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

45
ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
Image Credit : Asianet News

ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

நீண்டகாலமாகத் துணைக் கட்சிகளாகவே இருக்கும் காங்கிரஸ் மற்றும் விசிக, வரும் தேர்தலில் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றன.விஜய்யின் தவெக இளைஞர்களிடையே கொண்டுள்ள செல்வாக்கு, இந்த கட்சிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.தொகுதிப் பங்கீட்டில் திமுக காட்டும் பிடிவாதம் கூட்டணிக் கட்சிகளை மாற்றுப் பாதையைத் தேடத் தூண்டியுள்ளது.

55
தமிழகத்தில் பலமுனைப்போட்டி
Image Credit : Asianet News

தமிழகத்தில் பலமுனைப்போட்டி

காங்கிரஸ் தலைமையில் திருமா போன்ற ஆளுமைகள் தவெகவை நோக்கித் தங்கள் ஆதரவாளர்களுடன் பயணிப்பது வெறும் வதந்தியா அல்லது நிஜமான 'டுவிஸ்ட்'டா என்பது இன்னும் சில வாரங்களில் தெளிவாகிவிடும். எது எப்படியோ, 2026 தேர்தல் களம் 'இருமுனைப் போட்டி' என்பதில் இருந்து மாறி 'பலமுனைப் போட்டி'யாக உருவெடுத்துள்ளது மட்டும் உறுதி.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திமுக கூட்டணி கட்சிகள்
டிவி.கே. விஜய்
இந்திய தேசிய காங்கிரஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Recommended image2
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Recommended image3
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Related Stories
Recommended image1
ஆஃபர்களை அள்ளி வீசும் திமுக.! அவைத்தலைவராகும் ஓபிஎஸ்.?! ரவீந்திரநாத்துக்கு துணை முதல்வர் பதவியாம்.!
Recommended image2
சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்! மக்கள் பார்த்துட்டு இருக்காங்க! இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved