MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஆஃபர்களை அள்ளி வீசும் திமுக.! அவைத்தலைவராகும் ஓபிஎஸ்.?! ரவீந்திரநாத்துக்கு துணை முதல்வர் பதவியாம்.!

ஆஃபர்களை அள்ளி வீசும் திமுக.! அவைத்தலைவராகும் ஓபிஎஸ்.?! ரவீந்திரநாத்துக்கு துணை முதல்வர் பதவியாம்.!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக தரப்பிலிருந்து அவைத்தலைவர் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.தென் மாவட்ட வாக்குகளைக் கவரவும், அதிமுகவை பலவீனப்படுத்தவும் திமுக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 27 2026, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிரடி ஆஃபர்கள் மக்களே
Image Credit : Asianet News

அதிரடி ஆஃபர்கள் மக்களே

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழலில், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்கப் போராடி வருகிறார். அதேவேளையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி பலமான கூட்டணிகளை உருவாக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் திமுகவில் சேரும் பட்சத்தில் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் அதிரடி சலுகைகளை வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

25
ஓபிஎஸ்-க்கு அவைத்தலைவர் பதவி?
Image Credit : X

ஓபிஎஸ்-க்கு அவைத்தலைவர் பதவி?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், தற்போது எந்தவொரு பெரிய அங்கீகாரமும் இன்றி இருக்கிறார். இவரை திமுகவின் பக்கம் கொண்டு வருவதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைக்க திமுக விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஓபிஎஸ்-க்கு திமுக கூட்டணியில் முக்கியமான அவைத்தலைவர் அல்லது அதற்கு இணையான கௌரவப் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

Related Articles

Related image1
நமக்குள்ள என்ன அண்ணே இருக்கு! ஓபிஎஸ்க்கு டக்குனு போன் போட்ட நயினார்! மனம் மாறும் OPS?
Related image2
அதிமுகவில் இபிஎஸ் மட்டுமே எதிரி! அவரை வீழ்த்தும் வரை ஓய மாட்டேன்! பசும்பொன்னில் OPS,TTV, KAS கூட்டாக பேட்டி
35
ரவீந்திரநாத்துக்குத் துணை முதல்வர்?
Image Credit : x

ரவீந்திரநாத்துக்குத் துணை முதல்வர்?

இந்தச் செய்திகளின் உச்சகட்டமாக, ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. இது மிகவும் அதிரடியான ஆஃபராகப் பார்க்கப்படுகிறது.

வாரிசு அரசியல் கணக்கு

உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற ஒரு இளம் முகத்தைத் துணை முதல்வர் அந்தஸ்தில் திமுக களமிறக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

கூட்டணி பலம்

தென் தமிழகத்தில் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தைச் சேர்த்துக்கொள்வது திமுகவின் வெற்றியை மேலும் எளிதாக்கும் என்பது ஒரு பார்வையாக உள்ளது.

45
கச்சிதமான அரசியல் கணக்கு
Image Credit : Asianet News

கச்சிதமான அரசியல் கணக்கு

ஓபிஎஸ் மற்றும் திமுக ஆகிய இரு தரப்புக்குமே எடப்பாடி பழனிசாமி (EPS) ஒரு பொதுவான அரசியல் எதிரியாக உருவெடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதறடிக்க ஓபிஎஸ் ஒரு கருவியாக இருப்பார்.தற்போதுள்ள சூழலில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க ஓபிஎஸ்-க்கு ஒரு பலமான ஆதரவு தேவைப்படுகிறது. இதனையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் திமுகவின் கணக்கு சரியாகத்தானே இருக்கும் என்றே தோன்றுகிறது.

55
தமிழக அரசியலில் எதுவுமே சாத்தியமே
Image Credit : Asianet News

தமிழக அரசியலில் எதுவுமே சாத்தியமே

தமிழக அரசியலில் எதுவுமே சாத்தியம்தான். என்றாலும், இவை அனைத்தும் தற்போது வரை வெறும் ஊகங்களாகவே உள்ளன. ஒருவேளை இந்த ஆஃபர்கள் உண்மையாகி, ஓபிஎஸ் திமுகவுடன் கைகோர்த்தால், அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்
Recommended image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Recommended image3
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Related Stories
Recommended image1
நமக்குள்ள என்ன அண்ணே இருக்கு! ஓபிஎஸ்க்கு டக்குனு போன் போட்ட நயினார்! மனம் மாறும் OPS?
Recommended image2
அதிமுகவில் இபிஎஸ் மட்டுமே எதிரி! அவரை வீழ்த்தும் வரை ஓய மாட்டேன்! பசும்பொன்னில் OPS,TTV, KAS கூட்டாக பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved