MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!

CM Vijay-ஐ சந்திக்கும் மாணவர்கள்? : எப்போது? ஏன்? சூப்பர் அறிவிப்பு இதோ!

CM Vijay meets Students : தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, கல்வி விருது வழங்கும் விழாவை, இந்த ஆண்டு மிக பிரமாண்டமாக நடத்த த.வே.க. சார்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : May 25 2026, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கல்வி விருது விழா
Image Credit : Twitter

கல்வி விருது விழா

விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதற்கு பின், 2023 ஆண்டிலிருந்து தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக கல்வி விருது விழாவில், மாணவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டிலும் நான்கு கட்டங்களாக கல்வி விருது விழா நடத்தப்பட்டது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பேசிய உரைகள் பெரும் கவனத்தைப் பெற்றன. குறிப்பாக சமூக மற்றும் குடும்ப சவால்களை தாண்டி கல்வியில் சாதித்த மாணவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டது பலரின் பாராட்டைப் பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
முதல்வராக விஜய்
Image Credit : CM Vijay FB

முதல்வராக விஜய்

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், இந்த ஆண்டின் தவெக கல்வி விருது விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது. கூடவே, முதல்வராக விஜய் பங்கேற்கும் முதல் கல்வி விருது விழா இது என்பதால் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிவிட்டன.

Related Articles

Related image1
CM Vijay உத்தரவு : மஞ்சும்மல் பாய்ஸ் போன இடத்துக்கு நீங்க Free-ஆ போலாம்
Related image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
34
விழா எப்போது?
Image Credit : Twitter

விழா எப்போது?

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி, ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்த கட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கான இடத் தேர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
Image Credit : X

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை தவெக நிர்வாகிகள் சேகரித்து வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமப்படாமல் இருக்க ஒரே கட்டமாக மிகப்பெரிய அளவில் விழாவை நடத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தனி கவுரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

AM
Arun Mozhi Varman
விஜய் (நடிகர்)
கல்வி

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!
Recommended image2
TN Politics: சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Related Stories
Recommended image1
CM Vijay உத்தரவு : மஞ்சும்மல் பாய்ஸ் போன இடத்துக்கு நீங்க Free-ஆ போலாம்
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved