- Home
- Spiritual
- காசியை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த திருவெண்காடு; தீராத சாபங்களை தீர்த்து வைக்கும் புண்ணிய தலம்!
காசியை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த திருவெண்காடு; தீராத சாபங்களை தீர்த்து வைக்கும் புண்ணிய தலம்!
Thiruvenkadu Temple vs Kasi : சூரிய, சந்திர, அக்னி என மூன்று தீர்த்தங்கள் (குளங்கள்) இங்கு உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடுவது காசியில் கங்கையில் நீராடுவதற்குச் சமமானதாகக் கருதப்படுகிறது.

காசியை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த திருவெண்காடு
Thiruvenkadu Temple vs Kasi : சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பல வரலாற்று பின்னணிகள் இங்கு புதைந்துள்ளன கோயிலில் முனிவர்களும் தேவர்களும் எத்தனை பேர் இங்கு வந்து வழிபட்டினார்கள் என்று பார்க்கும்போது மிக ஆச்சரியமாகவே இருந்து வருகிறது இக்கோயிலின் வரலாறு மிகப் பழமையானது என்றும் கூறப்படுகிறது. வடக்கே உள்ள காசிக்கு எவ்வளவு வரலாறு இருக்கின்றதோ அதே அளவு திருவெண்காடுக்கும் இருக்கின்றது.சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர் முதலியோர் இந்த கோயிலில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளனர். இதனைப் பற்றிய தெளிவாக பார்க்கலாம்
சிவப்பிரியர்:
முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதமெனும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுட் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்டியது சிவப்பிரியர் அதனை மன்னித் தருளினார். பின்னர் வைகாசி மாதத்திலன் அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.
தீராத சாபங்களை தீர்த்து வைக்கும் புண்ணிய தலம்!
சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி எமனையும் எழுப்பியருளினார்.
வரலாறு:
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.
இந்த அகோர உருவை கண்ட போதே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
காசியை விட மூன்று மடங்கு சாபங்கள் தீரும்:
நம் காசிக்கு சென்று கங்கை நீரில் குளித்தால் ஏழு தலைமுறைகளுக்கு நாம் செய்த பாவங்கள் தீரும் என்று ஐதீகம் உள்ளது. ஆனால் நம் தமிழ்நாட்டில்உள்ள திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம்காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும் என்கிறார்கள்.
பலன்கள்:
திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து விட்டு சென்றால் நம் பாவம் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் என்று கூறப்படுகிறது குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்குவார் என்றும் கூறப்படுகிறது. நாம் எடுத்த காரியம், விரைவில் முடியும் என்றும் சொல்லப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த தீர்த்தத்தில் நீராடி சென்றால் நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் விரைவில் குணமடையும் என்றும் கூறப்படுகிறது.