MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!

நியூசிலாந்து பவுலர்களை ஓடவிட்ட இஷான் கிஷன் வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் விளாசினார். மாஸ் கம்பேக் கொடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆக திழந்தார். 

1 Min read
Author : Rayar A
Published : Jan 23 2026, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
2வது டி20 போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி
Image Credit : AFP

2வது டி20 போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் குவித்தது. கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் 27 பந்தில் 47 ரன்கள் விளாசினார்.

 பின்பு இமாலய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி கிஷான் கிஷனின் புயல் வேக அரைசதம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் மாஸ் கம்பேக் மூலம் வெறும் 15.2 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் SKY மாஸ் கம்பேக்
Image Credit : X/BCCI

இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் SKY மாஸ் கம்பேக்

நியூசிலாந்து பவுலர்களை ஓடவிட்ட இஷான் கிஷன் வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் விளாசினார். ஓராண்டுக்கு பிறகு அரை சதம் அடித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் வெறும் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே தனது பங்குக்கு 18 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசி நாட் அவுட் ஆக திகழந்தார்.

33
நியூசிலாந்து பீல்டிங், பவுலிங் மோசம்
Image Credit : X Handle

நியூசிலாந்து பீல்டிங், பவுலிங் மோசம்

நியூசிலாந்து அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் பவுலர் ஜாக் ஃபோல்ஸ் 3 ஓவரில் 67 ரன்களை வாரி வழங்கினார். வழக்கமாக நியூசிலாந்து அணி சிறப்பாக பீல்டிங் செய்யும் நிலையில், இந்த போட்டியில் படுமோசமாக பீல்டிங் செய்தனர். இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Recommended image2
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
Recommended image3
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Related Stories
Recommended image1
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!
Recommended image2
இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved